காமன்வெல்த் போட்டியில், தமிழகத்தின் சதீஷ்குமார் சிவலிங்கம் பளுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்டில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இப்போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர். இந்த காமன்வெல்த் போட்டிக்கு “கோல்ட் கோஸ்ட் 18” என்று பெயர் சூட்டப்பட்டது.
முதல் நாளில், இந்திய வீரர் குருராஜா பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இரண்டாம் நாளில், மகளிருக்கான பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா பானு தங்க பதக்கம் வென்று அசத்தினார். நேற்று, நடைபெற்ற ஆண்களுக்கான பளுதூக்குதல் 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் லாதர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். இப்போட்டியில் மொத்தம் 295 (136+159) கிலோ எடையை தூக்கிய தீபக் லாதர் இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை பெற்றுத் தந்தார். இதன் மூலம், மிக இள வயதில் காமன்வெல்த் விளையாட்டில் பளுதூக்குதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தீபக் பெற்றார்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆடவருக்கான பளுதூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். வேலுர் மாவட்டம் சத்துவாச்சாரியைச்சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் கடந்த முறை ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
இதையடுத்து, சதீஷ் சிவலிங்கத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், சச்சின் டெண்டுல்கர், சேவாக், ரெய்னா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பலர் சதீஷ் சிவலிங்கத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
Unbelievable victory for #SathishSivalingam. Despite having a hamstring injury going out there and lifting 317kgs is rather courageous. Congratulations on securing a Gold medal for the country.
Glasgow 2014 ????
Gold Coast 2018 ????#GC2018 #GC2018Weightlifting pic.twitter.com/BovttpoIin
— Sachin Tendulkar (@sachin_rt) 7 April 2018
This is a good habit to wake up to every morning! Another????Congratulations #SathishSivalingam on our third #GC2018Weightlifting #CWG2018
???????? pic.twitter.com/1bTMX6KL4n
— Suresh Raina (@ImRaina) 7 April 2018
And another early morning gift for us, a golden start to the day. Congratulations #SathishSivalingam on our third #GC2018Weightlifting Gold in Men's 77kg, lifting 317kg. Great effort despite the hamstring injury. His second successive gold after the one in Glasgow. #CWG2018 pic.twitter.com/18vDzPVLtr
— Virender Sehwag (@virendersehwag) 7 April 2018
3rd Day, 3rd Gold - Congratulations to #SathishSivalingam on winning gold in 77 kg weightlifting category at #GC2018, and becoming the first ever male Indian weightlifter to win Gold in 2 different editions of the Commonwealth Games. The entire Railway family is proud of you. pic.twitter.com/3lIyt80ORD
— Piyush Goyal (@PiyushGoyal) 7 April 2018
Bravo ????????????
Congrats #SathishSivalingam for winning Gold Medal???? for India despite Hamstring injury.
Sathish Sivalingam lifted a total of 317kg in Men’s 77 Kg category at #GC2018 .#GC2018Weightlifting pic.twitter.com/rFed68jOCM
— Maj Surendra Poonia (@MajorPoonia) 7 April 2018
#Commonwealth2018 பளு தூக்கும் பிரிவில் இரண்டாவது முறையாக தங்கம் வென்று தாய்த் தமிழ்நாட்டுக்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை தேடித்தந்துள்ள வீரர் #sathishsivalingam அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டுமென்ற அவரது கனவு மெய்ப்பட அன்பான நல்வாழ்த்துகள்.
— M.K.Stalin (@mkstalin) 7 April 2018
Congratulations to Indian weightlifter #SathishSivalingam from Tamilnadu for winning #Gold medal in #GoldCoast2018 #CommonwealthGames2018 #SathishKumarSivalingam pic.twitter.com/M1oq1JMBvb
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 7 April 2018
இதைத் தொடர்ந்து தங்கம் வென்ற சதீஷ் சிவலிங்கத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் இந்தியா தற்போது வரை 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.