இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 74 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்த பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார், தென்னாப்பிரிக்க வீரர் ஜொகன்னஸ் போத்தாவை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய 34 வயதான சுஷில் குமார், 10 புள்ளிகள் பெற்று தென்னாப்பிரிக்க வீரரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இது காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக வெல்லும் மூன்றாவது பதக்கமாகும்.
இதுகுறித்து சுஷில் குமார் தனது ட்விட்டரில், “இந்த விருதை எனது பெற்றோரு, குரு, ஹிமாச்சல் பிரதேசத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு சமர்ப்பிக்கின்றேன்” என்றார்.
இதன்மூலம், இந்தியா 14 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.