Wrestlers during protest at Jantar Mantar, New Delhi. (Express Photo/File)
Wrestlers protest Tamil News: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான, பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தெரிவித்து, ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில், சரண் சிங்குடன், பயிற்சியாளர்கள் சிலர் மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது.
Advertisment
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உதவி செயலாளர் வினோத் தோமர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், 125 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர்களில் 4 பேர் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை உறுதி செய்து உள்ளனர். அவர்களில் ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர். ஒருவர் காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்றவர். இதுதவிர, சர்வதேச நடுவர் மற்றும் மாநில அளவிலான பயிற்சியாளர் என மொத்தம் 4 பேர் சரண் சிங்குக்கு எதிராக சாட்சியங்களை உறுதி செய்தனர்.
இந்நிலையில், பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை டெல்லி போலீசாரிடம் அளித்த சாட்சியத்தில் உறுதிப்படுத்திய ஒரு சாட்சி 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். தற்போது அவரது பெயர் வெளியாகியுள்ளது. அவர் பெயர் அனிதா. போலீஸ் விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கும் நான்கு மாநிலங்களில் உள்ள 125 சாட்சிகளில் அனிதாவும் ஒருவர்.
இந்த நிலையில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் அனிதா (38) பேசியது பின்வருமாறு:
Advertisment
Advertisements
புகார்தாரர் பிரிஜ் பூஷண் சிங் தன்னை அவரது அறைக்கு அழைத்து "வற்புறுத்தலாக" கட்டிப்பிடித்த சம்பவத்தை "பகிர்வதற்காக" வெளிநாட்டில் நடந்த போட்டியில் இருந்து என்னை தொடர்பு கொண்டு பேசினார். புகார்தாரரான அந்த வீராங்கனை தேசிய அளவிலான முகாம்களில் எனக்கு அறை தோழியாக இருந்தவர்.
அவள் ( புகார் கொடுத்த மல்யுத்த வீராங்கனை) தங்கம் வென்ற சாம்பியன்ஷிப்பிற்குப் பிறகு, அவள் வீட்டிற்கு செல்லாமல் நேராக பாட்டியாலாவில் உள்ள முகாமுக்கு வந்தார். போட்டி நடந்த நகரத்திலிருந்து (வெளிநாட்டில்) இருந்து என்னை அழைத்து, சகோதரி, ஒரு சம்பவம் நடந்தது, திரும்பி வந்ததும் சொல்கிறேன். இங்கு ஏதோ தவறு நடக்கிறது என்றார்.
பாட்டியாலாவை அடைந்ததும், அவள் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார். போட்டி முடிந்து தன் அறைக்கு சென்றுவிட்டதாக அவள் என்னிடம் சொன்னாள். தலைவர் சார் உங்களைச் சந்திக்க விரும்புகிறார் என்று பிசியோவின் அழைப்பு வந்தது. அவள் பயந்தாள், ஏனென்றால் முன்பு கூட, அவர் அவளை தொலைபேசியில் தொந்தரவு செய்து இருந்தார். நான் உனக்கு புரதம் (சப்ளிமெண்ட்ஸ்) தருகிறேன் என்று சொல்லிவிட்டு எனக்கு கொடுக்கவில்லை என்றாள். அவள் ஏற்கனவே சங்கடமாக இருந்தாள். அவள் என்னிடம் சொன்னது என்னவென்றால், அவள் (அறையை) அடைந்ததும், அவள் தூரத்தில் அமர்ந்தாள். ஆனால் அவர் நீ என் மகள் போன்றவள், அருகில் வா. அவள் அவர் அருகில் சென்று அமர்ந்தாள், சட்டென்று அவளை இறுக அணைத்துக் கொண்டார். அந்த சம்பவத்திற்குப் பிறகு அவள் மிகவும் பயந்தாள். அங்கிருந்து திரும்பியதும் நடந்ததைச் சொல்லி அழுதாள்.
முன்னதாக, அவள் தங்கம் வென்ற சாம்பியன்ஷிப்பிற்கு முன்பே, அவர் (பிரிஜ் பூஷன் சரண் சிங்) அவளை தொலைபேசியில் தொடர்பு கொள்ளத் தொடங்கினார். நான் உங்களுக்கு உதவுவேன், என்னுடன் பேசு என்று கூறியுள்ளார். அவர் எனக்கும் தொலைபேசியிலும் அழைப்பார், அவளுடன் பேச விரும்புவார். முதலில், பிரிஜ் பூஷன் சரண் சிங் அழைத்தார், சாம்பியன்ஷிப்பில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, ஒரு பிசியோ அடிக்கடி அழைக்கத் தொடங்கினார். பிசியோ அவளிடம், 'தலைவர் உங்களைப் பற்றி கேட்கிறார்… தலைவர் உங்களுக்காக எதையும் செய்வார்’ என்று கூறுவார். அவள் மிகவும் சங்கடமாகவும் வருத்தமாகவும் இருந்தாள். சங்கத் தலைவர் ஏன் ஒரு பெண்ணை அடிக்கடி அழைப்பார்?.
'அவரது அழைப்புகளை எடுப்பதை நிறுத்தியதால்' புகார்தாரரான அவள் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிடம் இருந்து முடிந்தவரை விலகி இருக்க முயன்றார். தன் தோழி குரலை உயர்த்தியிருந்தால், அது அவளது விளையாட்டு வாழ்க்கையை முடித்திருக்கும்.
தற்போது யாராவது ஒருவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக பேசினால் கூட பின்விளைவுகள் ஏற்படும். முகாமில் உள்ள உணவின் தரம் குறித்து புகார் கூறவே பெண்கள் பயப்படும் நிலையில், பாலியல் துன்புறுத்தல் பற்றி பேச அவர்களுக்கு எப்படி தைரியம் வரும்?"
பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில், பிரிஜ் பூஷன் சரண் சிங் தங்கப் பதக்கம் வென்ற அன்றைய இரவு தன்னை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்த வைத்த சம்பவத்தை தனது மூத்த வீராங்கனையிடம் விவரித்ததையும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil