Advertisment

தபாங் டெல்லியை வீழ்த்தியது பெங்கால் வாரியஸ்; குஜராத் ஜெயண்ட்ஸிடம் ஹரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி

புரோ கபடியில் டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
Dabang Delhi KC vs Bengal Warriors and Gujarat Giants vs Haryana Steelers PKL Season 10 match updates in tamil

புரோ கபடி லீக் 2023 -24: தபாங் டெல்லி - பெங்கால் வாரியர்ஸ்; குஜராத் ஜெயன்ட்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

Advertisment

இந்நிலையில், இந்த புரோ கபடி தொடரில் வெள்ளிக்கிழமை 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. புரோ கபடியில் டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 45-38 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெற்றா மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 34-30 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment