11-வது புரோ கபடி லீக் (பி.கே.எல் 2024) போட்டி ஐதராபாத்தில் நாளை வெள்ளிக்கிழமை (அக்.18) முதல் தொடங்கி நடைபெற உள்ளது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்தப் போட்டியில் 2-வது கட்ட ஆட்டங்கள் நொய்டாவிலும், 3-வது கட்ட ஆட்டங்கள் புனேயிலும் நடக்கிறது.
புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்தான், முன்னாள் சாம்பியன்கள் பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி. யோத்தாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
தபாங் டெல்லி கே.சி. - யு மும்பா மோதல்
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் தபாங் டெல்லி - யு மும்பா அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 36 - 28 என்கிற புள்ளிகள் கணக்கில் யு மும்பா அணியை தபாங் டெல்லி வீழ்த்தியது. தபாங் டெல்லி அணியில் அபாரமாக ஆடிய ஆஷு மாலிக் 10 புள்ளிகளை எடுத்தார்.
நேருக்கு நேர்
பி.கே.எல் வரலாற்றில் தபாங் டெல்லி கே.சி. அணி 22 முறை யு மும்பாவை சந்தித்துள்ளது. இதில் தபாங் டெல்லி கே.சி. 12-ல் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், யு மும்பா 9 போட்டிகளில் வென்றுள்ளது.1 ஆட்டம் டையில் முடிந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“