Advertisment

புரோ கபடி லீக் : யு மும்பா அணியை வீழ்த்தியது தபாங் டெல்லி : தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு 2-வது வெற்றி

புரோ கபடியில் ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தபாங் டெல்லி - யு மும்பா அணிகள் மோதியது.

author-image
WebDesk
New Update
Dabang Delhi vs U Mumba and Telugu Titans vs UP Yoddhas PKL Season 10 match updates in Tamil

புரோ கபடி லீக் 2023 - 24: தபாங் டெல்லி - யு மும்பா; தெலுங்கு டைட்டன்ஸ் - யு.பி யோதாஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

Advertisment

இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற  ஆட்டத்தில் தபாங் டெல்லி - யு மும்பா அணிகள் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தபாங் டெல்லி அணி 39-33 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம், 14 போட்டிகளில் 8-வது வெற்றி பெற்ற தபாங் டெல்லி 49 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. தோல்வியடைந்த மும்பை அணி 13 போட்டிகளில் 6 வெற்றியுடன் 37 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. 

இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - யு.பி யோதாஸ் அணிகள் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 49-32 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 14 போட்டிகளில் 2 வெற்றியுடன் 15 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியில் கடைசி இடத்திலும், யு.பி.யோதாஸ் அணி 15 போட்டிகளில் 3 வெற்றியுடன் 23 புள்ளிகள் பெற்று 11-வது இடத்திலும் உள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment