தென்னாப்பிரிக்க அணியின் 'லெஜன்டுடா' வகை வீரர்கள் ஏ பி டி வில்லியர்ஸும், டேல் ஸ்டெய்னும். காலிஸ், கிப்ஸ், டிப்பனர், பவுச்சர் காலத்துக்கு பிறகு, நம்மாளுங்க மிகவும் நேசித்த தென்.ஆ., கிரிக்கெட் வீரர்களில் இவ்விருவரும் மிக முக்கியமானவர்கள்.
Advertisment
அதிலும், டி வில்லியர்ஸின் சர்வதேச ஓய்வு, ரசிகர்களால் இன்றும் ஜீரணிக்கவே முடியாத ஒன்றாகும். சரி ஸ்டெய்னாவது இருக்காரே என்று ஆறுதல் பட்டால், ஒரு ஓவர் போட்டு விட்டு, 'இன்ஜூரி' என்று ஒரு சீசனை விட்டே சென்றுவிடுகிறார்.
சரி, விஷயத்துக்கு வருவோம்.... தற்போது இந்த மெகா காம்போ Mzansi Super League தொடரில் விளையாடி வருகிறது. டி வில்லியர்ஸ் ஸ்பார்டன்ஸ் அணிக்கும், ஸ்டெய்ன் கேப்டவுன் ப்ளிட்ஸ் அணிக்கும் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், இவ்விரு அணிகளும் மோதிய போட்டியின் போது, டி வில்லியர்ஸுக்கு ஸ்டெய்ன் பந்து வீசினார். சீறி வந்த பந்தை, டி வில்லியர்ஸ் ஸ்ட்ரெய்ட்டில் 4th கியரில் டிரைவ் செய்ய, பந்து ஸ்டெய்ன் காலில் பட்டு மீண்டும் ஏபிடி-யிடமே வந்தது.
சரி நண்பனாச்சே என்று ஏபிடி குனிந்து பந்தை எடுத்து ஸ்டெய்னிடம் வீசினால், அவரோ பந்தை வாங்கி ஸ்டெம்பை நோக்கி எறிந்து அம்பயரிடம் அவுட் அப்பீல் செய்கிறார்.
ஆனாலும் அசராத ஏபிடி மீண்டும் பந்தை எடுத்து நண்பனிடம் கொடுக்கிறார்.
ஸ்டெய்னுக்கு இன்னும் விளையாட்டுப் பிள்ளைன்னே நெனப்பு...