Irfan-pathan | pakistan: இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த 7ம் தேதி காலை முதல் போர் தாக்குதலை தொடங்கினர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்புக்கும் இடையே போர் 30 நாட்களுக்கு மேலாக நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் மழை பொழிந்து தாக்குதல் தொடுத்தது.
இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. அப்போது காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500 பேர் பரிதமாக உயிரிழந்தனர். இஸ்ரேலின் இந்த செயலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. உடனடி போர் நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன.
இர்பானுக்கு கோரிக்கை
இந்நிலையில், காசாவில் ஒன்றும் அறியாத குழந்தைகளை கொன்று குவித்து வருவதை நிறுத்த வேண்டும் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் வலியுறுத்தி இருந்தார். அந்தப் பதிவில் இர்பான் பதான், ஒவ்வொரு நாளும், காசாவில் 0-10 வயதுடைய அப்பாவி குழந்தைகள் உயிர்களை இழந்து வருகிறார்கள்.
ஆனால், இந்த உலகம் அமைதியாக இருக்கிறது. ஒரு விளையாட்டு வீரராக, நான் இதை சொல்ல தான் முடியும். ஆனால், உலகத் தலைவர்கள் ஒன்றிணைந்து இந்த முட்டாள்தனமான கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது." என்று பதிவிட்டார்.
அந்த பதிவு பதில் அளித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா, "இர்பான் பாய், குழந்தைகளின் வலியை நீங்கள் புரிந்துகொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அதில் நான் உங்களுடன் நிற்கிறேன். ஆனால் தயவு செய்து பாகிஸ்தான் இந்துக்கள் பற்றியும் பேசுங்கள். பாகிஸ்தானிலும் நிலைமை அதே போலத் தான் உள்ளது." என்று கூறினார்.
இந்நிலையில், டேனிஷ் கனேரியாவின் பதிவுக்கு கமெண்ட் செய்துவரும் பாகிஸ்தான் இணைய வாசிகள், "அவர் சொல்வது உண்மை அல்ல" என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
டேனிஷ் கனேரியா பாகிஸ்தான் நாட்டில் வசிக்கும் இந்து ஆவார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 2000 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் வரை விளையாடினர். 61 டெஸ்ட் போட்டிகளில் 9082 ரன்கள் மற்றும் 261 விக்கெட்டுகளையும், 18 ஒருநாள் போட்டிகளில் 683 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.
பாகிஸ்தான் அணியில் சிறந்த ஸ்பின்னராக வலம் வந்த அவருக்கு அணியில் தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் அவர் விளையாடி வந்தார். அவர் மீது மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பால் தடை செய்யப்பட்டார்.
தன் மீதான புகார் நிரூபிக்கப்படவில்லை என கனேரியா வாதத்தை முன் வைத்து வருகிறார். தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ள டேனிஷ் கனேரியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும், அந்த நாட்டு கிரிக்கெட் அமைப்பையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“