Advertisment

என்னடா இது வார்னருக்கு வந்த சோதனை... எதிரணி ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு மாறிப் போன வீடியோ!

வார்னர் ஓமன் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு செல்வது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட நிலையில், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
David Warner almost enters wrong dressing room after getting out in Australias T20 World Cup match vs Oman video Tamil News

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

David Warner | Australia | T20 World Cup 2024: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த ஜூன் 2 முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வெஸ்ட் இண்டீசில் உள்ள பார்படாஸ் பிரிட்ஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் குரூப் பி-யில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் மோதின. 

Advertisment

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த  ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 67 ரன்களும், டேவிட் வார்னர் 56 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து, 165 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஓமன் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தியது. 

வரலாற்று சாதனை படைத்த வார்னர் 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரன் பிஞ்ச் மொத்தம் 103 போட்டிகளில் விளையாடி 3,120 ரன்களை எடுத்திருக்கிறார். இதனை வார்னர் முறியடித்துள்ளார். 

ஓமன் அணிக்கு எதிரான போட்டியில், 56 ரன்கள் (51 பந்துகள், 6 பவுண்டரிகள்) எடுத்த வார்னர், மொத்தம் 104 போட்டிகளில் விளையாடி 3,155 ரன்களை குவித்திருக்கிறார். வார்னர், 34.28 பேட்டிங் சராசரி வைத்திருப்பதுடன், 142.53 ஸ்டிரைக் ரேட்டும் வைத்திருக்கிறார்.

இந்த போட்டியில், வார்னர் மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார். அவர், 27-வது அரை சதத்தை அடித்தார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் கெயிலின் சாதனையையும் முறியடித்திருக்கிறார். கெயில் 110 அரை சதம் அடித்திருக்கிறார். வார்னர் மொத்தம் 111 அரை சதம் எடுத்திருக்கிறார். இதேபோன்று, இந்த வரிசையில் இந்திய வீரர் விராட் கோலி இவர்களை நெருங்கும் வகையில், 105 அரை சதம் எடுத்துள்ளார்.

வார்னருக்கு வந்த சோதனை 

ஓமனுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி வரலாற்றுச் சாதனை படைத்த வார்னர், 51 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அவர் தனது அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமை நோக்கி நடந்து கொண்டிருந்தார். படிகட்டுகள் சிலவற்றை ஏறிக் கடந்த பின் தான் அவர் எதிரணியின் ட்ரெஸ்ஸிங் ரூமை நோக்கி செல்கிறார் என்று அங்கு இருந்தவர்கள் அவரிடம் அறிவுறுத்தி உள்ளார்கள். இதனையடுத்து. மீண்டும் கீழே இறங்கி வந்த அவர் ஆஸ்திரேலியாவின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றார். 

வார்னர் ஓமன் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு செல்வது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட நிலையில், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. உலகின் பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் ஆடிய வார்னருக்கு வந்த சோதனை என ரசிகர்கள் ஜாலியாக கலாய்த்து வருகிறார்கள். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

David Warner Australia T20 World Cup 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment