தெலுங்கு ஹிட் பாடலுக்கு குடும்பத்துடன் குத்தாட்டம் போட்ட டேவிட் வார்னர் – வீடியோ

கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், தெலுங்கு ஹிட் பாடலான ‘புட்டபொம்மா’வுக்கு, டான்ஸ் ஆடி, அதனை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. @davidwarner31Oh dear here we go!! First attempt haha. ##buttabomma @candywarner31♬ original sound – SwAmy PriyAzz???? கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இதனால், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் வீட்டில் பாதுகாப்புடன் இருந்து வருகின்றனர். ஆஸி., கிரிக்கெட் […]

David Warner and wife are breaking the internet dancing to Telugu ‘Butta Bomma’
David Warner and wife are breaking the internet dancing to Telugu ‘Butta Bomma’

கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், தெலுங்கு ஹிட் பாடலான ‘புட்டபொம்மா’வுக்கு, டான்ஸ் ஆடி, அதனை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

@davidwarner31Oh dear here we go!! First attempt haha. ##buttabomma @candywarner31♬ original sound – SwAmy PriyAzz????


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இதனால், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் வீட்டில் பாதுகாப்புடன் இருந்து வருகின்றனர். ஆஸி., கிரிக்கெட் வீரர் டேவிட் வார்டன், டிக்டாக் செயலியில், வீடியோவுக்கு நடனமாடி பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரபல தெலுங்கு பாடலான ‘புட்டபொம்மா’ பாடலுக்கு, தனது மனைவி கேண்டிஸ் உடன் அவர் இணைந்து ஆடிய வீடியோ அனைவரையும் கவர்ந்தது. அதனை அவர் இன்ஸ்டாகிராமிலும் பதிவிட, லைக்ஸ்களை அள்ளி, வைரலாகி உள்ளது.

6 மணி நேரத்திற்குள் 27 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்கள் இந்த வீடியோவுக்கு கிடைத்துள்ளது. தெலுங்கு ரசிகர்கள் பலரும், ‘ஆகா…. தெலுங்கு பாடல் உலகம் முழுவதும் ரீச் ஆகியிருக்கே என்று கொண்டாட, ஐபிஎல்-ல அவரு விளையாடுறதே ஹைதராபாத் அணிக்கு தாம்பா’ என்று அவர்களுக்கு பதிலளித்து வருகின்றனர் மற்ற அணியின் ரசிகர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: David warner and wife are breaking the internet dancing to telugu butta bomma

Next Story
ஐபிஎல் 2017: பிளேஆஃப் சுற்று கெஸ்ஸிங்…..
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express