/indian-express-tamil/media/media_files/LVFmOCbKHt4kduVvcuZU.jpg)
நடப்பு உலகக்கோப்பை தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய வார்னர் 2 சதம், 2 அரைசதம், 50 பவுண்டரி, 24 சிக்ஸர்களுடன் 535 ரன்கள் எடுத்தார்.
worldcup 2023 | india-vs-australia | david-warner: இந்திய மண்ணில் பரபரப்பாக நடைபெற்று வந்த 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக உலகக் கோப்பையை வென்றது.
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், இந்திய வீரர்களும் ஆட்டகளத்தில் இருந்து கண்ணீருடன் சென்ற வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வைரலாகின.
இந்திய ரசிகரிடம் வார்னர் மன்னிப்பு
இந்நிலையில், உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரரான டேவிட் வார்னர் இந்திய ரசிகரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பான அவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்திய ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், 'இந்தியாவை தோற்கடித்ததன் மூலம் வார்னரும், ஆஸ்திரேலிய அணியும் கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களை உடைத்து விட்டனர்' என்று ஆதங்கமாக பதிவிட்டு இருந்தார்.
அதற்கு பதிலளித்த வார்னர், "கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை உடைத்தற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது மிகச் சிறந்த போட்டியாக இருந்தது. இங்குள்ள ரசிகர் சூழல் நம்பமுடியாத அளவில் இருந்தது. இந்தியா உண்மையில் மிகத் தீவிரமாக இந்த தொடரை நடத்தியது. அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டார். ஆதங்கமாக பதிவிட்ட அந்த ரசிகர் தற்போது ட்வீட்டை நீக்கியுள்ளார்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய வார்னர் 2 சதம், 2 அரைசதம், 50 பவுண்டரி, 24 சிக்ஸர்களுடன் 535 ரன்கள் எடுத்தார். இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பெரிதும் சோபிக்காத வார்னர் மூன்று பந்துகளில் வெறும் ஏழு ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், பீல்டிங்கில் மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.