இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைபெற்ற போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மைதானத்தில் ‘புட்ட பொம்மா’ நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டேவிட் வார்னர் கிரிக்கெட்டில் மட்டுமல்ல சமூக ஊடகங்களில் அவருடைய டிக்-டாக் வீடியோவுக்காகவும் பிரபலமானவர். வார்னர் ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக இருந்து விளையாடினார். வார்னர் ஐதராபாத் அணிக்காக விளையாடியபோது, அவர் பல தெலுங்கு படங்களின் பாடல்களுக்கு டிக்-டாக் வீடியோ செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தார். வார்னர் தான் மட்டுமல்லாமல், தனது மனைவி, மகள்களுடனும் சேர்ந்து ஜாலியாக டிக்டாக் செய்த சில வீடியோ பதிவிட்டுள்ளார். அவருடைய டிக் டாக் வீடியோக்கள் அதுவும் தெலுங்கு பட பாடல்களுக்கு அவர் செய்த டிக்டாக் டான்ஸ் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
ஒரு அதிரடியான கிரிக்கெட் வீரராக அறியப்பட்ட டேவிட் வார்னர் அவருடைய டிக்டாக் வீடியோக்கள் மூலம் அவர் ஒரு ஜாலியான நபர் என்பது ரசிகர்களுக்கு தெரியவந்தது. அப்படி, ஏற்கெனவே, வார்னர் தனது மனைவியுடன் ஆடிய தெலுங்கு பாடலான புட்டபொம்மா டிக்-டாக் வீடியோ ரசிகர்களைக் கவர்ந்து நெட்டில் வைரலாக பரவியது.
தெலுங்கு சினிமா நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த ‘அலா வைகுந்தம் புரம்லோ’ படத்தில் இடம்பெற்ற ‘புட்ட பொம்மா’ பாடலும் அந்த பாடலுக்கான நடனமும் தெலுங்கு ரசிகர்களையும் தாண்டி பிரபலமான பாடல். அந்த பாடலுக்கு தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிற மாநில ரசிகர்களும் டிக்டாக் செய்து பதிவிட்டுள்ளனர்.
Buttabomma and Warner Never Ending Love Story ????????♥️.#AUSvIND @davidwarner31 pic.twitter.com/TjEeMKzgt3
— M A N I (@Mani_Kumar15) November 27, 2020
இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே இன்று சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி 69 ரன்கள் குவித்தார். பின்னர், ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங் செய்தபோது, பவுண்டரி எல்லைக் கோட்டு அருகே இருந்த வார்னர் புட்ட பொம்மா பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். வார்னர் புட்ட பொம்மா பாடலுக்கு மைதானத்திலேயே ஸ்டெஸ் போட்டதைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்து ஆரவாரித்தனர். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:David warner dance to butta bomma song in sydney cricket ground viral video
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி