David Warner News in Tamil: கிரிக்கெட் ரசிகர்களை மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து குஷிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்களில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னருக்கு முக்கிய இடம் உண்டு. கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் சமூக வலைத்தளங்களில் இவர் செய்த சேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ‘டிக்டோக்’ பக்கத்தில் இவரின் குடும்பத்தினரோடு செய்த வீடியோக்கள் ஒரு பக்கம் வைரலாக, தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகர்களின் முகத்தை ‘மார்பிங்’ செய்து இவர் பதிவிட்ட வீடியோக்கள் மறுபக்கம் இணையத்தை தெறிக்க விட்டன. குறிப்பாக இவரின் புட்டா பொம்மா… புட்டா பொம்மா, தனுஷின் ரவுடி பேபி, வீடியோகள் பல மில்லியன் பார்வையார்களை கடந்தன.
இந்தியாவில் டிக்டோக் தளம் தடை செய்யப்பட்ட நிலையில், வார்னர் தனது சேட்டைகளை இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவில் தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஸ்பா படத்தில் இடம்பெற்ற காட்சிகளை அவர் மார்பிங் செய்து வீடியோவாக எடுத்து பதிவிட அது இணைய பக்கங்களில் வைரலாகியது.
இப்படி இந்திய திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடுவது அல்லது சமீபத்திய இந்திய ட்ரெண்டிங்கை தொடர்வதை வழக்கமாக கொண்டுள்ள வார்னர், கிரிக்கெட் மைதானத்தில் நடமாடியுள்ள வீடியோ தற்போது சமூக மற்றும் இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற நிலையில், பீல்டிங் செய்து கொண்டிருந்த வார்னர் பக்கம் கேமரா நகர்ந்த போது அவர் திடீரென தனது நடனத்தை தொடர்ந்தார். மேலும் களத்தில் அவர் பாங்க்ரா உட்பட பல நடன அசைவுகளை வெளிப்படுத்தினார். அவர் கடையில் ஆடிய பஞ்சாபி நடனம் அசத்தலாக இருந்தது என கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
The crowd and the camera love @davidwarner31 🕺🏼#BoysReadyHain I #PAKvAUS pic.twitter.com/UWQYAjTLsk
— Pakistan Cricket (@TheRealPCB) March 8, 2022
ட்ராவில் முடிந்த ஆட்டம்:
பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் (ராவல்பிண்டி டெஸ்ட்) ட்ராவில் முடிந்தது.
முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 162 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 476 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 459 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 2வது இன்னிங்சில் களமாடிய பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 252 ரன்களை குவித்தது. ஆட்டத்தை முடிக்க ஒரு மணி நேரம் மீதமிருந்த நிலையில், இரு அணிகளும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டனர். இதனால் போட்டி ட்ரா ஆனது.
பாகிஸ்தான் அணிகாக முதல் இன்னிங்சில் 157 ரன்களை சேர்த்த தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக், 2வது இன்னிங்சில் 111 ரன்கள் சேர்த்திருந்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் முதல் இன்னிங்சில் 44 ரன்கள், 2வது இன்னிங்சில் 136 ரன்கள் என மிரட்டினார்.
It’s been a great week. Milestones were achieved by our boys and some truly amazing memories were made here in Rawalpindi 🙌🏼
Once again, thank you @CricketAus for being in 🇵🇰 #BoysReadyHain l #PAKvAUS pic.twitter.com/oAOyUAK6Sm— Pakistan Cricket (@TheRealPCB) March 8, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.