IND vs AUS ODI, David Warner Tamil News: கிரிக்கெட் ரசிகர்களை மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் குஷிப்படுத்தும் வீரர்களில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரரான டேவிட் வார்னரும் ஒருவர். கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் தனது ‘டிக்டோக்’ பக்கத்தில் தமிழின் முன்னணி நடிகர்களின் முகத்தை ‘மார்பிங்’ செய்து வீடியோக்களை பதிவிட்டு இணையத்தை தெறிக்க விட்ட இவர், தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். இந்நிலையில், வார்னர் மும்பையில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

காயம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் சுற்றிப்பயணமாக வந்துள்ள நிலையில், அந்த அணி முதலில் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது. எனினும், 3வது போட்டியில் வெற்றி, 4வது போட்டியில் சமன் செய்துள்ள ஆஸ்திரேலியா, அடுத்தாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதே உத்வேகத்துடன் களமாட உள்ளது. அவ்வகையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Hello and welcome to the Wankhede Stadium, where #TeamIndia will kickstart the ODI series against Australia.#INDvAUS @mastercardindia pic.twitter.com/OXt3tuOS14
— BCCI (@BCCI) March 15, 2023
முன்னதாக, டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் போது முகமது சிராஜ் வீசிய பந்து ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னரின் தலையில் பலமாக தாக்கியது. இதனால் நிலைகுலைந்த வார்னர் 2வது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து, வார்னர் மீதமிருந்த 2 போட்டிகளில் விளையாடாமல் சொந்த நாடு திரும்பினார். தற்போது அவர் காயத்தில் இருந்து மீண்டுள்ள நிலையில், ஒருநாள் தொடருக்காக தயாராகி வருகிறார்.

ஸ்ட்ரீட் கிரிக்கெட்
இந்த நிலையில், வார்னர் மும்பையில் சிறுவர்களுடன் ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆடி மகிழ்ந்துள்ளார். மேலும் அவர் கிரிக்கெட் ஆடும் வீடியோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் கேப்சனில் அவர், “அடித்து நொறுக்க ஒரு நல்ல தெருவை கண்டுபிடித்தேன்” (Found a quiet street to have a hit) என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil