scorecardresearch

ஆஸி,.-க்கு அடுத்த பின்னடைவு… வார்னர் திடீர் விலகல்!

ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த பெரும் பின்னடைவாக, அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

David Warner ruled out of IND vs AUS Tests Tamil News
David Warner walks back after getting out in the first innings in Delhi. (PTI)

Australia’s Warner ruled out of remaining Tests vs India Tamil News: பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்த தொடர் வெற்றிகள் மூலம் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 1ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்த பெரும் பின்னடைவாக அந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் போது முகமது சிராஜ் வீசிய பந்து வார்னரின் தலையில் பலமாக தாக்கியது. இதனால் நிலைகுலைந்த வார்னர் 2வது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக மாட் ரென்ஷா களமிறங்கினார்.

36 வயதான வார்னர் இப்போது காயத்தில் இருந்து மீள சிட்னிக்குச் சென்றுள்ளார். ஆனால், அவர் மார்ச் 17 ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முன் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தனது ஃபார்மிற்காக போராடிய அவர்தனது மூன்று இன்னிங்ஸ்களில் இருந்து மொத்தமாக 26 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதுதொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “டேவிட் வார்னர் இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் நாடு திரும்புவார். டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வார்னரின் முழங்கையில் தாக்கப்பட்டு, தலைமுடி அளவு எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் மதிப்பீட்டிற்குப் பிறகு, அவருக்கு மறுவாழ்வு காலம் தேவைப்படும். இது டெஸ்ட் தொடரின் எஞ்சிய தொடரில் மேலும் ஈடுபடுவதைத் தடுக்கும்.

டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து வரும் மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்காக அவர் இந்தியாவுக்குத் திரும்புவார் என்று தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.” என்று கூறியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டை காயம் காரணமாக இழந்துள்ள நிலையில், தொடக்க வீரர் வார்னரும் தொடரில் இருந்து விலகி இருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வார்னருக்குப் பதிலாக இந்தூர் மற்றும் அகமதாபாத்தில் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: David warner ruled out of ind vs aus tests tamil news