டேவிட் வார்னரின் ஒரே த்ரோவில் சிதறிய ஸ்டெம்ப்புகள்! – இவ்வளவு துல்லியமான த்ரோ சாத்தியமா? (வீடியோ)

Ball Tampering எனும் ஒரு விஷயத்தால், இத்தனை வருடங்கள் தான் கட்டிக் காத்த பெயரையும், மரியாதையையும் இழந்தார் முன்னாள் ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர். பத்திரிக்கையாளர்கள் முன் கண்ணீர் விட்டு அழுததை அவர் கூட மறந்திருக்கலாம். ஆனால், ரசிகர்கள் என்றும் அதனை மறக்க மாட்டார்கள். ஒரு வருட தடைக் காலத்திற்கு பிறகு மீண்டும் சர்வதேச களத்திற்கு திரும்பிய வார்னர், பெவிலியனில் ஒலித்த எதிரணி ரசிகர்களின் கேலிக் கூச்சல்களையும் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறார். ஆனால், பள்ளத்தில் […]

david warner run out babar azam pak vs aus video - டேவிட் வார்னரின் ஒரே த்ரோவில் சிதறிய ஸ்டெம்ப்புகள்! - ஆஃப் சைடு, லெக் சைடு கிங்கு டா நான் (வீடியோ)
david warner run out babar azam pak vs aus video – டேவிட் வார்னரின் ஒரே த்ரோவில் சிதறிய ஸ்டெம்ப்புகள்! – ஆஃப் சைடு, லெக் சைடு கிங்கு டா நான் (வீடியோ)

Ball Tampering எனும் ஒரு விஷயத்தால், இத்தனை வருடங்கள் தான் கட்டிக் காத்த பெயரையும், மரியாதையையும் இழந்தார் முன்னாள் ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர்.

பத்திரிக்கையாளர்கள் முன் கண்ணீர் விட்டு அழுததை அவர் கூட மறந்திருக்கலாம். ஆனால், ரசிகர்கள் என்றும் அதனை மறக்க மாட்டார்கள். ஒரு வருட தடைக் காலத்திற்கு பிறகு மீண்டும் சர்வதேச களத்திற்கு திரும்பிய வார்னர், பெவிலியனில் ஒலித்த எதிரணி ரசிகர்களின் கேலிக் கூச்சல்களையும் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறார்.

ஆனால், பள்ளத்தில் விழும் புலி எழுந்திருக்கும் போது நரியாகிவிடாது. அதன் வேட்டையாடும் குணத்தை யாராலும் மழுங்கச் செய்து விட முடியாது. அதன் போர்க் குணத்தை யாராலும் உள்ளங்கையில் அடக்கிவிட முடியாது. அப்படி அடக்க நினைத்தால், சேதாரம் எதிராளிக்கு தான்.

ஆஸ்திரேலியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணி, நேற்று(நவ.5) இரண்டாவது டி20 போட்டியில் மோதியது. இதில், அரைசதம் அடித்து பக்கா கான்ஃபிடன்ட்டோடு ஆடிக் கொண்டிருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசம், டேவிட் வார்னரின் ஒரு த்ரோவில் ஸ்டெம்ப்புகள் சிதற மிரண்டு போய் வெளியேறி இருக்கும் வீடியோ தான் இப்போது ஹாட்.

2014ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக லாங்கில் இருந்து ஓடி வந்த வார்னர், ஆஃப் சைடில் இருந்து துல்லியமாக த்ரோ அடித்து ரன் அவுட் செய்ததையும், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக லெக் சைடில் இருந்து ரன் அவுட் செய்த வீடியோவையும் இணைத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா வீடியோ வெளியிட்டுள்ளது.


கெத்து யா!

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: David warner run out babar azam pak vs aus video

Next Story
“மாஸ்டர் பிளாஸ்டர்” சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 44-வது பர்த்டே…
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com