டி 20 தொடரில் இருந்து விலகிய டேவிட் வார்னர்… காரணம் இதுதான்!

டேவிட் வார்னருக்கு எதிர்பாராத விதமாகத் தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

david warner third odi against india
david warner third odi against india

david warner third odi against india : இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள், டி 20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார். 2 வது ஒரு நாள் போட்டியின் போது காயம் அடைந்ததால் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக டார்சி ஷார்ட் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

சிட்னியில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த டேவிட் வார்னருக்கு எதிர்பாராத விதமாகத் தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவரைப் பரிசோதித்த டாக்டர் சில நாட்கள் ஓய்வில் இருக்கும்படி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், இவர் எதிர்வரும் மூன்றாவது ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. முதல் போட்டியில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து நேற்றைய போட்டியிலும் வென்ற ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அதிரடியாகக் கைப்பற்றியது.

காயத்தின் தன்மை மற்றும் எதிர்வரவிருக்கும் டெஸ்ட் போட்டிகளைக் கருத்தில் கொண்டு ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டித்தொடரில் இருந்து வார்னர் விலகியுள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு முன் தன் உடற்தகுதியை நிரூபிக்கும்பட்சத்தில் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: David warner third odi against india sports news tamil

Next Story
ஐபிஎல்-2017: அதிரடி காட்டிய ரெய்னா… குஜராத் அணிக்கு 2-வது வெற்றி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express