When and Where to Watch DC vs CSK 2019 Live Match: ஐபிஎல் 2019 தொடரில் இன்று(மார்ச்.26) நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
ஐபிஎல் 2019 சீசன் தொடங்கியதில் இருந்தே சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. பெங்களூருவின் லோ ஸ்கோர் கேம், ரசல்-ன் காட்டடி, கெயிலின் மரண அடி, அஷ்வினின் Mankad ரன் அவுட் என்று ஒவ்வொரு மேட்சும் தெரிந்தோ, தெரியாமலோ பரபரப்பை பரப்பிக் கொண்டிருக்கின்றன.
Mankading வரலாறு தெரியுமா? அஷ்வின் செய்தது சரியா? பிராட்மேன் கற்பித்த பாடம்!
இந்த நிலையில், டெல்லியில் இன்று நடைபெறும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
பெங்களூரு உடனான முதல் போட்டியில் சென்னை வெற்றிப் பெற, மும்பையுடனான தனது முதல் போட்டியில் டெல்லியும் மாஸ் வெற்றிப் பெற்றது. இதனால், இரு அணிகளில் முதலில் தோற்பது யார் என்பதை இன்றைய போட்டி தீர்மானிக்க உள்ளது.
IPL 2019, CSK vs DC Live Match Online
இன்று இரவு 7.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 8 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா கோட்லா ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் போட்டியை நேரடியாக கண்டுகளிக்கலாம்.
ஆன்லைனைப் பொறுத்தவரை, ஹாட்ஸ்டாரில் காணலாம். தவிர, நமது ஐஇதமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன் பெறலாம்.