IPL 2023, Delhi vs Chennai Live Cricket Match Score: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில், இன்று (சனிக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் டெல்லியில் மாலை 3:30 மணிக்கு அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கும் 67வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
Indian Premier League, 2023Arun Jaitley Stadium, Delhi 28 May 2023
Delhi Capitals 146/9 (20.0)
Chennai Super Kings 223/3 (20.0)
Match Ended ( Day – Match 67 ) Chennai Super Kings beat Delhi Capitals by 77 runs
டாஸ் வென்ற சென்னை பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் – கான்வே ஜோடி தொடக்க முதலே அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடியில் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடியில் டெல்லியின் குல்தீப் யாதவ் வீசிய 12 ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு மிரட்டினார் ருதுராஜ். அவர் 50 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
தொடர்ந்து வந்த துபே 9 பந்துகளில் 3 சிக்ஸர்களை மட்டுமே பறக்கவிட்டு 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த கான்வே 52 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். ஜடேஜா 20 ரன்னுடனும், தோனி 5 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு சென்னை அணி 223 ரன்களை குவித்தது. இதனால், டெல்லி அணிக்கு 224 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டெல்லி அணி தரப்பில் சேத்தன் சகாரியா, கலீல் அகமது, அன்ரிச் நார்ட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
Time to hold the Qila! 💪🏻#DCvCSK #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/KmHYdGAqMj
— Chennai Super Kings (@ChennaiIPL) May 20, 2023
தொடர்ந்து 234 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. ஒருமுனையில் விக்கெட் சரிவு இருக்க மறுமுனையில் இருந்த கேப்டன் வார்னர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அக்சர் படேல் – வார்னர் ஜோடி சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய நிலையில் அக்சர் படேல் 15 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
களத்தில் தனி ஒருவனாக போராடிய கேப்டன் வார்னர் 86 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், லீக் சுற்றின் முடிவில் சென்னை 14 போட்டிகளில் 17 புள்ளிகள் பெற்று பிளேஆஃப்-க்கு தகுதி பெற்றுள்ளது. தற்போது புள்ளிகள் பட்டியல் 2வது இடத்தில் நீடிக்கிறது.
A terrific victory in Delhi for the @ChennaiIPL 🙌
— IndianPremierLeague (@IPL) May 20, 2023
They confirm their qualification to the #TATAIPL 2023 Playoffs 😎
Scorecard ▶️ https://t.co/ESWjX1m8WD #TATAIPL | #DCvCSK pic.twitter.com/OOyfgTTqwu
We play ON! 🦁🔥#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/L1vLxjcNzN
— Chennai Super Kings (@ChennaiIPL) May 20, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் 234 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. டெல்லி அணிக்காக போராடிய கேப்டன் வார்னர் 86 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் 234 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. பந்துவீச்சில் சென்னை ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், டெல்லி அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
டெல்லி அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் 234 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. பந்துவீச்சில் சென்னை ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், டெல்லி அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
டெல்லி அணி 14 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் 234 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. பந்துவீச்சில் சென்னை ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், டெல்லி அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
டெல்லி அணியின் அக்சர் படேல் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் 234 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. பந்துவீச்சில் சென்னை ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், டெல்லி அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
டெல்லி அணியின் கேப்டன் வார்னர் அரைசதம் விளாசியுள்ளார்.
டெல்லி அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் 234 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. பந்துவீச்சில் சென்னை ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், டெல்லி அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
டெல்லி அணி 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்களை குவித்துள்ளது. இதனால் டெல்லி அணிக்கு 224 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர்களான கான்வே 87 ரன்களும், ருதுராஜ் 79 ரன்களும் எடுத்தனர். 3 சிக்ஸர்களை மட்டும் பறக்கவிட்ட துபே 22 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 20 ரன்னுடனும், தோனி 5 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
டெல்லி அணி தரப்பில் சேத்தன் சகாரியா, கலீல் அகமது, அன்ரிச் நார்ட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி தொடக்க வீரர் டெவோன் கான்வே அரைசதம் அடித்து மிரட்டினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 52 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக பேட்டிங் செய்த துபே 9 பந்துகளில் 3 சிக்ஸர்களை மட்டுமே பறக்கவிட்டு 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் தோனி களமிறங்கியுள்ளார்.
18 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக பேட்டிங் செய்த துபே 9 பந்துகளில் 3 சிக்ஸர்களை மட்டுமே பறக்கவிட்டு 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் டெவோன் கான்வே – ஷிவம் துபே விளையாடி வருகின்றனர்.
17 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் டெவோன் கான்வே – ஷிவம் துபே விளையாடி வருகின்றனர்.
16 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் டெவோன் கான்வே – ஷிவம் துபே விளையாடி வருகின்றனர்.
15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க முதலே அதிரடியாக விளையாடினர். அரைசதம் விளாசிய அவர் 50 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
இந்த ஜோடியில் சிக்ஸரை பறக்கவிட்ட கான்வே அரைசதம் அடித்தார்.
14 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 140 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
இந்த ஜோடியில் அரைசதம் அடித்த ருதுராஜ் குல்தீப் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு மிரட்டினார்.
12 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
இந்த ஜோடியில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 87 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
9 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
ருதுராஜ் 22 ரன்களும், கான்வே 28 ரன்களும் எடுத்துள்ளனர்.
6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கியுள்ளனர்.
5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கியுள்ளனர்.
4வது ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கியுள்ளனர்.
3வது ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கியுள்ளனர்.
2வது ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கியுள்ளனர்.
முதல் ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கியுள்ளனர்.
சென்னை அணி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 7 முறையும் வெற்றியும், 3 முறையும் தோல்வியும் கண்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா
டெல்லி கேப்பிடல்ஸ்:
டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), ரிலீ ரோசோவ், யாஷ் துல், அமன் ஹக்கிம் கான், அக்சர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, கலீல் அகமது, அன்ரிச் நார்ட்ஜே
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதனால், டெல்லி அணி பந்துவீசும்.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியம் (முன்பு ஃபெரோஸ் ஷா கோட்லா) ஆடுகளம் பொதுவாக மெதுவான ஒன்றாகும். அதாவது, ஆடுகளத்தின் மேற்பரப்பில் வறண்ட தன்மை இருப்பதால், ஆடுகளம் மெதுவாக இருக்கிறது. அது சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த உதவும். இந்த சீசனில் இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 160 ஆக இருந்தது. சில சமயங்களில் ஆடுகளம் சவாலாக இருக்கும்.
போட்டி மாலையில் தொடங்குவதால், 2வது இன்னிங்சின் போது ஆடுகளம் மெதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனவே, டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் செய்ய நினைக்கும். ஆரம்பத்திலேயே பேட்டிங் நிலைமையை அதிகம் பயன்படுத்த வேண்டும். ஆட்டத்தின் பிற்பகுதியில் ஆடுகளம் மெதுவாக இருப்பதால் சேஸிங் கடினமாக இருக்கலாம். அதனால், சென்னையின் கேப்டன் எம்.எஸ் தோனி அதற்கேற்ப திட்டங்களை வகுப்பார் என எதிர்பார்க்கலாம்.
டெல்லி கேபிடல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சென்னை அணி 18-ல் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி 10-ல் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ்
டேவிட் வார்னர் (கேப்டன்), பிரித்வி ஷா, ரிலீ ரோசோவ், பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், அமன் கான், யாஷ் துல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா
சென்னை சூப்பர் கிங்ஸ்:
டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா
நடப்பு சீசனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. +0.381 என்ற சிறப்பான நெட் ரன்ரேட்டை கொண்டிருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடிக்க இன்று நடக்கும் ஆட்டத்தில் வெற்றியை ருசித்தால் போதும். எனினும், சென்னை அணி இந்த ஆட்டத்தில் தோற்றால் கூட 2ம் இடத்திலே நீடிக்கலாம். அதற்கு, லக்னோ, மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் தோற்க வேண்டும்.
சென்னையின் நெட் ரன்ரேட் +0.381 லக்னோவின் +0.304 நெட் ரன்ரேட்டை விட சற்று சிறப்பாக உள்ளது. அவர்கள் 13 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகளுடன் உள்ளனர். எனவே, சென்னை அணி நெட் ரன்ரேட்டில் கணிசமான முன்னணியை இலக்காகக் கொள்ள வேண்டும். ஆனால் முதலாவதாக, டெல்லிக்கு எதிரான வெற்றி இன்றியமையாதது. அது அவர்களை பிளேஆஃப்-க்கு எளிதில் தகுதி பெற உதவும்
நடப்பு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், புள்ளிகள் பட்டியலில் 2வது இடம் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது. இந்த இடத்திற்கு வர ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய 4 அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
சென்னை அணி தோற்று லக்னோ, மும்பை, பெங்களூரு அணிகள் தங்களுடைய கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும். சென்னை அணியின் ஆட்டத்திற்கு பிறகு தான் லக்னோ, மும்பை, பெங்களூரு அணிகளின் ஆட்டங்கள் நடக்கிறது. எனவே சென்னை அணி அடுத்த சுற்றுக்குள் நுழைய வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும்.
எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை அணி இந்த சீசனில் இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி 7ல் வெற்றி, 5ல் தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. 'பிளே-ஆப்' சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க தனது கடைசி லீக்கான இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றால் போதுமானதாகும். தோல்வி அடைந்தால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும்.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை – டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.