Advertisment

DC vs CSK: பேட்டிங், பவுலிங்கில் அசத்திய டெல்லி; சென்னையை வீழ்த்தி அபார வெற்றி

வார்னர், பண்ட் அரை சதம்; 191 ரன்கள் குவித்த் டெல்லி; பந்துவீச்சிலும் மிரட்டல்; 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி முதல் வெற்றி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DC vs CSK  Live score IPL 2024 Match 13 Delhi Capitals vs Chennai Super Kings scorecard updates Visakhapatnam in tamil

ஐ.பி.எல். 2024: டெல்லி கேபிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதல்

DC vs CSK, IPL 2024 | Chennai Super Kings | Delhi CapitalsScore: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7:30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ - வி.டி.சி.ஏ கிரிக்கெட் ஸ்டேடியத்தில் டெல்லி கேபிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. 

Advertisment

புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவு செய்தது. இந்த 2 போட்டிகளும் சொந்த மண்ணில் நடந்த நிலையில், அதில் போட்டு வைத்த திட்டங்களை சரியாக நிறைவேற்றி வெற்றியை ருசித்தது. ஆனால், 3-வது போட்டி எதிரணியின் மைதானத்தில்  நடைபெறுவதால் அதற்கு ஏற்றால் போல் அணியின் வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். மேலும், சென்னை அணியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அவர்கள் ஹாட்ரிக் வெற்றிப் பெற வேண்டும் என்றும் ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். 
 
ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்றது. இந்த தோல்விகளில் இருந்து மீண்டு வர டெல்லி அணி கடுமையாக போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

டெல்லி கேபிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - நேருக்கு நேர் 

ஐ.பி.எல் தொடரில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 19 ஆட்டங்களில் சென்னை அணியும், 10 முறை டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளன. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Mar 31, 2024 23:25 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

    20 ஆவது ஓவரை நார்ஜே வீசினார். தோனி முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இரண்டாவது பந்தில் சிக்சர் விளாசினார். 4 ஆவது பந்தில் மீண்டும் பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் மீண்டும் சிக்சர் விளாசினார். இருப்பினும் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Mar 31, 2024 23:20 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 19 ஓவர்கள் முடிவில் 151- 6

    19 ஆவது ஓவரை முகேஷ் வீசினார். சிறப்பாக பந்துவீசிய முகேஷ் இந்த ஓவரில் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Mar 31, 2024 23:13 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 18 ஓவர்கள் முடிவில் 146- 6

    18 ஆவது ஓவரை கலீல் அகமது வீசினார். 5 ஆவது பந்தை தோனி சிக்சருக்கு தூக்கினார். இந்த ஓவரில் மொத்தம் 12 ரன்கள் வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Mar 31, 2024 23:11 IST
    துபே அவுட்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 17 ஓவர்கள் முடிவில் 134- 6

    17 ஆவது ஓவரை முகேஷ் வீசினார். முதல் பந்திலே துபே அவுட் ஆனார். துபே 18 ரன்கள் எடுத்து ஸ்டப்ஸிடம் கேட்ச் கொடுத்தார். இதனையடுத்து தோனி களமிறங்கினார். முதலில் பந்திலே பவுண்டரி அடித்தார். 4 ஆவது பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்தார், கடைசி பந்தை தோனி பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் மொத்தம் 14 ரன்கள் வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Mar 31, 2024 23:02 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 16 ஓவர்கள் முடிவில் 120- 5

    16 ஆவது ஓவரை நார்ஜே வீசினார். இந்த ஓவரில் பவுண்டரிகள் எதுவும் இல்லை. இந்த ஓவரில் மொத்தம் 7 ரன்கள் வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Mar 31, 2024 23:00 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 15 ஓவர்கள் முடிவில் 113- 5

    15 ஆவது ஓவரை இஷாந்த் வீசினார். முதல் பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் மொத்தம் 10 ரன்கள் வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Mar 31, 2024 22:51 IST
    அடுத்தடுத்த பந்தில் ரகானே, ரிஸ்வி அவுட்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 14 ஓவர்கள் முடிவில் 103- 5

    14 ஆவது ஓவரை முகேஷ் குமார் வீசினார். 3 ஆவது பந்தில் ரகானே அவுட் ஆனார். அவர் வார்னரிடம் கேட்ச் கொடுத்தார், ரகானே 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து வந்த ரிஸ்வி முதல் பந்திலே டக் ஆனார். அவர் கலீல் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக ஜடேஜா களமிறங்கினார். இந்த ஓவரில் மொத்தம் 2 ரன்கள் வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Mar 31, 2024 22:41 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 13 ஓவர்கள் முடிவில் 101- 3

    13 ஆவது ஓவரை நார்ஜே வீசினார். 5 ஆவது பந்தில் சிவம் பவுண்டரி அடித்தார், இந்த ஓவரில் மொத்தம் 9 ரன்கள் வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Mar 31, 2024 22:39 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 12 ஓவர்கள் முடிவில் 92- 3

    12 ஆவது ஓவரை மார்ஷ் வீசினார். ரகானே 3 மற்றும் 4 ஆவது பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் மொத்தம் 14 ரன்கள் வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Mar 31, 2024 22:36 IST
    மிட்செல் அவுட்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 11 ஓவர்கள் முடிவில் 78- 3

    11 ஆவது ஓவரை அக்சர் வீசினார். 2 ஆவது பந்தில் அக்சரிடமே கேட்ச் கொடுத்து மிட்செல் அவுட் ஆனார். இதனையடுத்து சிவம் துபே களமிறங்கினார். இந்த ஓவரில் மொத்தம் 3 ரன்கள் வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Mar 31, 2024 22:33 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 10 ஓவர்கள் முடிவில் 75- 2

    10 ஆவது ஓவரை ரஷீக் சலாம் வீசினார். 3 ஆவது பந்தை ரகானே சிக்சருக்கு தூக்கினார். 5 ஆவது பந்தில் மிட்செல் சிக்சர் அடித்தார். இந்த ஓவரில் மொத்தம் 17 ரன்கள் வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Mar 31, 2024 22:29 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 9 ஓவர்கள் முடிவில் 58- 2

    9 ஆவது ஓவரை அக்சர் வீசினார். 3 ஆவது பந்தை மிட்செல் சிக்சருக்கு தூக்கினார். இந்த ஓவரில் மொத்தம் 11 ரன்கள் வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Mar 31, 2024 22:22 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 8 ஓவர்கள் முடிவில் 47- 2

    8 ஆவது ஓவரை ரஷிக் சலாம் வீசினார். 2 ஆவது பந்தில் ரகானே பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் மொத்தம் 9 ரன்கள் வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Mar 31, 2024 22:20 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 7 ஓவர்கள் முடிவில் 38- 2

    7 ஆவது ஓவரை அக்சர் வீசினார். 2 ஆவது பந்தில் ரகானேவும், மிட்செலும் சிங்கிள்ஸ்களாக ரன் சேர்த்தனர். இந்த ஓவரில் மொத்தம் 6 ரன்கள் வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Mar 31, 2024 22:10 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 6 ஓவர்கள் முடிவில் 32- 2

    6 ஆவது ஓவரை மீண்டும் நார்ட்ஜே வீசினார். 2 ஆவது பந்தில் ரகானே சிக்சர் அடித்தார். இந்த ஓவரில் மொத்தம் 9 ரன்கள் வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Mar 31, 2024 22:03 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 5 ஓவர்கள் முடிவில் 23- 2

    5 ஆவது ஓவரை மீண்டும் கலீல் அகமது வீசினார். 3 ஆவது பந்தில் மிட்செல் பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் மொத்தம் 6 ரன்கள் வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Mar 31, 2024 21:59 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 4 ஓவர்கள் முடிவில் 17- 2

    4 ஆவது ஓவரை மீண்டும் இஷாந்த் வீசினார். கடைசி 2 பந்துகளை ரஹானே பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் மொத்தம் 10 ரன்கள் வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Mar 31, 2024 21:57 IST
    ரவீந்திரா அவுட்; சென்னை சூப்பர் கிங்ஸ்: 3 ஓவர்கள் முடிவில் 7- 2

    3 ஆவது ஓவரை மீண்டும் கலீல் அகமது வீசினார். முதல் பந்தில் ரகானே ஒரு ரன் எடுத்தார். 5 ஆவது பந்தில் ரவீந்திரா அவுட் ஆனார். அவர் ஸ்டப்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 7 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Mar 31, 2024 21:54 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: 2 ஓவர்கள் முடிவில் 6- 1

    அடுத்ததாக ரஹானே களமிறங்கினர். இஷாந்த சர்மா வீசிய இரண்டாவது ஓவரில் மொத்தம் 3 ரன்கள் வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 6 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Mar 31, 2024 21:51 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ்: முதல் ஓவர் முடிவில் 3- 1

    சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். கலீல் அகமது வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ருதுராஜ் அவுட் ஆனார். ருதுராஜ் 2 ரன்களுடன் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த ஓவரில் மொத்தம் 3 ரன்கள் வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 3 ரன்கள் எடுத்துள்ளது. 



  • Mar 31, 2024 21:21 IST
    டெல்லி கேபிடல்ஸ்: 20 ஓவர்கள் முடிவில் 191- 5

    20 ஆவது ஓவரை முஷ்தாபிஷூர் வீசினார். 2 ஆவது பந்தில் அபிஷேக் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் மொத்தம் 12 ரன்கள் வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து சென்னை அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது



  • Mar 31, 2024 21:18 IST
    அரைசதம் அடித்து பண்ட் அவுட்; டெல்லி கேபிடல்ஸ்: 19 ஓவர் முடிவில் 179- 5

    19 ஆவது ஓவரை மீண்டும் பதிரனா வீசினார். இந்த ஓவரில் முதல் பந்தில் பண்ட் 2 ரன் அடித்தார். அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த 2 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இதன்மூலம் பண்ட் அரைசதம் அடித்தார். 5 ஆவது பந்தில் ருதுராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பண்ட் 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும். அடுத்ததாக அபிஷேக் களமிறங்கினார். இந்த ஓவரில் மொத்தம் 17 ரன்கள் வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது



  • Mar 31, 2024 21:14 IST
    டெல்லி கேபிடல்ஸ்: 18 ஓவர் முடிவில் 162- 4

    18 ஆவது ஓவரை முஷ்தாபிஷூர் வீசினார். இந்த ஓவரில் பண்ட் ஒரு பவுண்டரி மற்றும் சிக்சர் விளாசினார். இந்த ஓவரில் மொத்தம் 14 ரன்கள் வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது



  • Mar 31, 2024 21:12 IST
    டெல்லி கேபிடல்ஸ்: 17 ஓவர் முடிவில் 148- 4

    17 ஆவது ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரில் 5 சிங்கிள்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இந்த ஓவரில் மொத்தம் 5 ரன்கள் வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது



  • Mar 31, 2024 21:11 IST
    டெல்லி கேபிடல்ஸ்: 16 ஓவர் முடிவில் 143- 4

    அடுத்ததாக அக்சர் படேல் களமிறங்கினார். 16 ஆவது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். கடைசி பந்தில் பண்ட் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் மொத்தம் 9 ரன்கள் வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது



  • Mar 31, 2024 21:09 IST
    ஒரே ஓவரில் 2 விக்கெட்; டெல்லி கேபிடல்ஸ்: 15 ஓவர் முடிவில் 134- 4

    15 ஆவது ஓவரை மீண்டும் பதிரனா வீசினார். 3 ஆவது பந்தை மார்ஷ் பவுண்டரிக்கு விரட்டினார். 4 ஆவது பந்தில் மார்ஷ் போல்டானார். மார்ஷ் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டப்ஸ் 2 ஆவது பந்தில் போல்டாகி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இந்த ஓவரில் மொத்தம் 5 ரன்கள் வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது



  • Mar 31, 2024 21:05 IST
    டெல்லி கேபிடல்ஸ்: 14 ஓவர் முடிவில் 129- 2

    14 ஆவது ஓவரை சாஹர் வீசினார். முதல் 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டும் கிடைத்த நிலையில், கடைசி பந்தில் மார்ஷ் சிக்சர் அடித்தார். இந்த ஓவரில் மொத்தம் 8 ரன்கள் வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்துள்ளது



  • Mar 31, 2024 20:52 IST
    டெல்லி கேபிடல்ஸ்: 13 ஓவர் முடிவில் 121- 2

    13 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். 3 ஆவது பந்தில் பண்ட் சிக்சர் அடித்தார். இந்த ஓவரில் மொத்தம் 10 ரன்கள் வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது



  • Mar 31, 2024 20:47 IST
    டெல்லி கேபிடல்ஸ்: 12 ஓவர் முடிவில் 111- 2

    12 ஆவது ஓவரை மீண்டும் தேஷ்பாண்டே வீசினார். முதல் 5 பந்துகளில் பெரிதாக ரன்கள் வராத நிலையில், கடைசி பந்தில் மார்ஷ் பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் மொத்தம் 7 ரன்கள் வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது



  • Mar 31, 2024 20:43 IST
    பிரித்வி அவுட்; டெல்லி கேபிடல்ஸ்: 11 ஓவர் முடிவில் 104 ரன்கள்

    11 ஆவது ஓவரை மீண்டும் ஜடேஜா வீசினார். 3 ஆவது பந்தை பிரித்வி சிக்சருக்கு தூக்கினார். இருப்பினும் அடுத்த பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிரித்வி 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து மிட்செல் மார்ஷ் களமிறங்கினார். இந்த ஓவரில் மொத்தம் 9 ரன்கள் வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்துள்ளது



  • Mar 31, 2024 20:35 IST
    வார்னர் அவுட்; டெல்லி கேபிடல்ஸ்: 10 ஓவர் முடிவில் 95 ரன்கள்

    10 ஆவது ஓவரை மீண்டும் முஷ்தாபிஷூர் வீசினார். வார்னர் முதல் பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை முஷ்தாபிஷூர் தவறவிட்டார். இருப்பினும் 3 ஆவது பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பதிரனா கெட்டியாக பிடித்துக் கொண்டார். வார்னர் 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து ரிஷப் பண்ட் களமிறங்கினார். இந்த ஓவரில் மொத்தம் 4 ரன்கள் வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது



  • Mar 31, 2024 20:28 IST
    வார்னர் அரை சதம்; டெல்லி கேபிடல்ஸ்: 9 ஓவர் முடிவில் 91 ரன்கள்

    9 ஆவது ஓவரை மீண்டும் ஜடேஜா வீசினார். வார்னர் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார். 4 ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்க, வார்னர் அரை சதம் கடந்தார். வார்னர் 32 பந்துகளில் அரை சதம் விளாசினார். இது வார்னரின் 62 ஆவது ஐ.பி.எல் அரை சதமாகும். இந்த ஓவரில் மொத்தம் 11 ரன்கள் வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்துள்ளது



  • Mar 31, 2024 20:24 IST
    டெல்லி கேபிடல்ஸ்: 8 ஓவர் முடிவில் 80 ரன்கள்

    8 ஆவது ஓவரை பதிரனா வீசினார். டெல்லி அணியின் ரன் வேட்டையை கட்டுபடுத்தினார். இந்த ஓவரில் மொத்தம் 5 ரன்கள் வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது



  • Mar 31, 2024 20:21 IST
    டெல்லி கேபிடல்ஸ்: 7 ஓவர் முடிவில் 75 ரன்கள்

    7 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். இரண்டாவது பந்தில் பிரித்வி சிக்சர் அடித்தார். 4 ஆவது பந்தில் வார்னர் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் மொத்தம் 13 ரன்கள் வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்துள்ளது



  • Mar 31, 2024 20:15 IST
    டெல்லி கேபிடல்ஸ்: 6 ஓவர் முடிவில் 62 ரன்கள்

    பவர் ப்ளேயின் கடைசி ஓவரை முஷ்தாபிஷூர் வீசினார். முதல் பந்தில் வார்னர் பவுண்டரி அடிக்க, இரண்டாவது பந்து நோ பால் ஆனது. அடுத்த 3 மூன்று பந்துகளையும் பிரித்வி பவுண்டரிக்கு விரட்டி ஹாட்ரிக் ஆக்கினார். இந்த ஓவரில் மொத்தம் 20 ரன்கள் வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்துள்ளது



  • Mar 31, 2024 20:11 IST
    டெல்லி கேபிடல்ஸ்: 5 ஓவர் முடிவில் 42 ரன்கள்

    ஐந்தாவது ஓவரை மீண்டும் தீபக் சாஹர் வீசினார். 3 ஆவது பந்தில் வார்னர் சிக்சர் விளாசினார். அடுத்த 2 பந்துகளையும் பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் 18 ரன்கள் வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது



  • Mar 31, 2024 20:07 IST
    டெல்லி கேபிடல்ஸ்: 4 ஓவர் முடிவில் 24 ரன்கள்

    நான்காவது ஓவரை மீண்டும் தேஷ்பாண்டே வீசினார். 2 ஆவது பந்தில் பிரித்வி பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் 5 ரன்கள் வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது



  • Mar 31, 2024 19:56 IST
    டெல்லி கேபிடல்ஸ்: 3 ஓவர் முடிவில் 19 ரன்கள்

    மூன்றாவது ஓவரை மீண்டும் தீபக் சாஹர் வீசினார். 2 ஆவது பந்தில் வார்னர் சிக்சர் அடிக்க, அந்த ஓவரில் 9 ரன்கள் வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது



  • Mar 31, 2024 19:52 IST
    டெல்லி கேபிடல்ஸ்: 2 ஓவர் முடிவில் 10 ரன்கள்

    இரண்டாவது ஓவரை துஷார் தேஷ்பாண்டே வீசினார். சிறப்பாக பந்துவீசிய அவர் அந்த ஓவரில் 3 ரன்களை மட்டும் கொடுத்தார். டெல்லி கேபிடல்ஸ் அணி 2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது



  • Mar 31, 2024 19:45 IST
    டெல்லி கேபிடல்ஸ்: முதல் ஓவரில் 7 ரன்கள்

    டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர். தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் வார்னர் பவுண்டரி அடித்தார். டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ளது



  • Mar 31, 2024 19:29 IST
    டெல்லி கேபிடல்ஸ் இம்பாக்ட் ப்ளேயர்ஸ்

    சுமித் குமார், குமார் குஷாக்ரா, ரசிக் தார் சலாம், பிரவீன் துபே, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்



  • Mar 31, 2024 19:25 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ் இம்பாக்ட் ப்ளேயர்ஸ்

    சிவம் துபே, ஷர்துல் தாக்கூர், ஷேக் ரஷீத், மொயின் அலி, மிட்செல் சான்ட்னர்



  • Mar 31, 2024 19:18 IST
    டெல்லி கேபிடல்ஸ் பிளேயிங் லெவன்

    பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது



  • Mar 31, 2024 19:17 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்

    ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, முஸ்தபிசுர் ரஹ்மான்.



  • Mar 31, 2024 19:13 IST
    சென்னை அணியில் மாற்றமில்லை

    ருதுராஜ் கெய்க்வாட்: இங்கே முதல் ஆட்டம், இந்த ஆடுகளத்தைப் பற்றி அதிக தகவல்கள் இல்லை. அது எப்படி என்று பார்ப்போம். திட்டம் அப்படியே உள்ளது, விஷயங்களை எளிமையாக வைத்து அந்த தனிப்பட்ட தருணங்களை, தனிப்பட்ட போர்களில் வெற்றி பெற முயற்சிப்போம். எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை, அதே அணியுடன் செல்கிறோம். (கேப்டன் பதவியில்) நான் அதை எனது மாநிலத் தரப்பிற்காகவும், இந்தியாவுக்காக வயதுக் குழு மட்டத்திலும் செய்துள்ளேன், மேலும் எனக்கு உதவ சில அனுபவமிக்க தோழர்கள் உள்ளனர்.



  • Mar 31, 2024 19:07 IST
    டெல்லி அணியில் இரண்டு மாற்றங்கள்

    ரிஷப் பந்த்: நாங்கள் முதலில் பேட்டிங் செய்வோம். விக்கெட் நன்றாக இருக்கிறது, நாங்கள் அதை பேட்டிங் டிராக்காக பயன்படுத்த விரும்புகிறோம், போர்டில் அதிக ரன்களை வைக்க விரும்புகிறோம். இது நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்று நினைக்கிறேன், ஆனால் நாங்கள் இங்கே பயிற்சி செய்தோம். நாங்கள் இங்கு வந்து 10 நாட்கள் இந்த மைதானத்தில் பயிற்சி செய்தோம். இரண்டு மாற்றங்கள் - குல்தீப் வெளியே, ப்ரித்வி ஷா உள்ளே. ரிக்கி புய் அவுட், இஷாந்த் ஷர்மா உள்ளே வருகிறார். 



  • Mar 31, 2024 19:03 IST
    டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு

    இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து சென்னை அணி பந்துவீச தயாராகி வருகிறது.



  • Mar 31, 2024 18:30 IST
    விசாகப்பட்டினத்தில் ஆவரேஜ் ஸ்கோர் என்ன?

    சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ள நிலையில், விசாகப்பட்டினம் மைதானத்தில் ஆவரேஜ் ஸ்கோர் 157 ஆக உள்ளது



  • Mar 31, 2024 17:48 IST
    உத்தேச அணி: டெல்லி கேபிடல்ஸ்

    டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிக்கி புய்/பிரித்வி ஷா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்/ கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார் [இம்பாக்ட் ப்ளேயர்: லலித் யாதவ்]



  • Mar 31, 2024 17:17 IST
    உத்தேச அணி: சென்னை சூப்பர் கிங்ஸ்

    ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, MS தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான் [இம்பாக்ட் ப்ளேயர்: மதீஷா பத்திரனா]



Chennai Super Kings Delhi Capitals IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment