டெல்லி கேப்பிட்டல்ஸ் உடன் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
15 புள்ளிகளுடன் உள்ள சி.எஸ்.கே டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிராக நடைபெறும் ஆட்டதில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றில் தேர்வு செய்யப்படும். இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால், கூடுதலாக மும்பை இந்தியன்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் போட்டியில் வெற்றி பெற்றால். சி.எஸ்.கே அணி போட்டியைவிட்டு வெளியேற வேண்டும். கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ரன் ரேட், சற்று குறைவாக இருக்கிறது. ஆனால் பெரிய வித்தியாசம் இல்லை.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரன் ரேட் +0.304 ஆக உள்ளது. இதுவே சி.எஸ்.கேவின் ரன் ரேட் +0.381 ஆக உள்ளது இது லக்னோ அணியைவிட அதிகம். இந்த இரண்டு அணிகளும் 15 புள்ளிகளில் உள்ளனர்.
இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள், ஐபிஎல் போட்டிகளில் 27 முறை விளையாடி உள்ளனர். இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 முறை வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 17 முறை வெற்றி பெற்றுள்ளது.
சி.எஸ்.கே அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் அது நடக்காமல் போனது. இந்நிலையில் சி.எஸ்.கே புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஆனால் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சி.எஸ்.கே அணி தோல்வியடைந்தால், கடைசி நேரத்தில் ஐ.பி.எல் போட்டியை விட்டே செல்ல வேண்டி வரும். இதுவரை நடந்த 5 போட்டிகளில், சி.எஸ்.கே இரண்டு போட்டிகளில் வெற்றியும், இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“