IPL 2024 | Delhi Capitals | Gujarat Titans: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல். 2024 தொடரில் 40-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லி மைதானத்தில் மோதியது.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து, டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், பிரித்வி ஷா மற்றும் ஜேக் ஃபிராசெர் மெக்குர்க் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.
டெல்லி கேபிடல்ஸ் அணி 3.2 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்திருந்தபோது, 14 பந்துகளில் 23 ரன்கள் அடித்டிருந்த ஃப்ரேஸர் மெக்குர்க், சந்தீப் வாரியர் பந்தில் நூர் அஹமதுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, அக்சர் படேல் பேட்டிங் செய்ய வந்தார்.
சந்தீப் வாரியர் வீசிய அதே ஓவரின் 5வது பந்தில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 7 பந்துகளில் 11 ரன்கள் அடித்திருந்த நிலையில், நூர் அஹமதுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, அக்சர் படேல் பேட்டிங் செய்ய வந்தார். அடுத்து ஷாய் ஹோப் பேட்டிங் செய்ய வந்தார்.
அக்சர் படேல் அதிரடியாக விளையாட ஷாய் ஹோப் வந்த வேகத்திலேயே சந்தீப் வாரியர் பந்தில் ரஷீத் கான் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி சென்றார்.
அடுத்து வந்த ரிஷப் பண்ட் அக்சர் படேல் உடன் ஜோடி சேர்ந்தார். இவரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துகளை சிக்சர் ஃபோர் என்று பறக்க விட்டனர். சிறப்பாக அதிரடியாக விளையாடிய அக்சர் படேல், அரை சதம் அடித்தார்.
டெல்லி கேபிடல்ஸ் அணி 16.6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்திருந்தபோது, 43 பந்துகளில் 66 ரன்கள் அடித்திருந்த அக்சர் படேல், நூர் அஹமது பந்தில், சாய் கிஷோர் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் பேட்டிங் செய்ய வந்தார். ஆனாலும், மறுமுனையில் ரிஷப் பண்ட் தனது அதிரடி ஆட்டத்தை நிறுத்த வில்லை. தொடர்ந்து அடித்து ஆடிய ரிஷப் பண்ட் அரை சதம் அடித்தார்.
இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. ரிஷப் பண்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 88 ரன்கள் அடித்திருந்தார். ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 7 பந்துகளில் 26 ரன்கள் அடித்திருந்தார். இதன் மூலம், டெல்லி கேபிடல்ஸ் அணி 225 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து, 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரித்திமான் சஹா, கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர்.
குஜராத் டைட்டன்ஸ் அணி 1.3 ஓவர்களில் 13 ரன்கள் எடுத்திருந்தபோது, 5 பந்துகளில் 6 ரன்கள் அடித்திருந்த சுப்மன் கில் நார்ட்ஜே பந்தில் அக்சர் படேல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, வந்த சாய் சுதர்ஷன், விரித்திமான் சஹா உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடினார்கள்.
குஜராத் டைட்டன்ஸ் அணி 9.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்திருந்தபோது, 25 பந்துகளில் 39 ரன்கள் அடித்திருந்த விரித்திமான் சஹா, குல்தீப் யாதவ் பந்தில் அக்சர் படேல் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து அஸ்மதுல்லா ஒமர்சாய் பேட்டிங் செய்ய வந்தார். அவர் 1 ரன் மட்டுமே எடுத்து, அக்சர் படேல் பந்தில் மெக்குர்க் இடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்திலேயே வெளியேறினார்.
அடுத்து வந்த டேவிட் சாய் சுதர்ஷன் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக அடித்து ஆடினார்கள். சாய் சுதர்ஷன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி 12.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தபோது, 39 பந்துகளில் 65 ரன்கள் அடித்திருந்த சாய் சுதர்ஷன் ரசிக் சலாம் பந்தில் அக்சர் படேல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ஷாருக் கான் பேட்டிங் செய்ய வந்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி 12.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்திருந்தபோது, 5 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே அடித்த ஷாருக் கான், ரசிக் சலாம் பந்தில் ரிஷப் பண்ட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ராகுல் திவாட்டியா பேட்டிங் செய்ய வந்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி 15.6 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தபோது, 5 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே அடித்த ராகுல் திவாட்டியா, குல்தீப் யாதவ் பந்தில் ரிஷப் பண்ட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ரஷித் கான் பேட்டிங் செய்ய வந்தார்.
ஒரு பக்கம் விக்கேட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் டேவிட் மில்லர், அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்தபோது, 23 பந்துகளில் 55 ரன்கள் அடித்திருந்த டேவிட் மில்லர் முகேஷ் குமார் பந்தில், ரசிக் சலாம் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, சாய் கிஷோர் பேட்டிங் செய்ய வந்தார். 6 பந்துகளில் 13 ரன்கள் அடித்திருந்த நிலையில், ரசிக் சலாம் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, மோஹித் சர்மா பேட்டிங் செய்ய வந்தார்.
ரஷித் கான் - மோஹித் சர்மா குஜராத் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசி ஓவரில் வெற்றி பெற 19 ரன்கள் தேவை என்றபோது, முகேஷ் குமார் ஓவரில் ரஷித் கான் முதல் 2 பந்துகளிலும் ஃபோர் அடித்தார். 3, 4 பந்துகளை டாட் செய்த ரஷித் கான், 5வது பந்தை சிக்சர் அடித்தார். கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் டிரா அல்லது சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற பரபரப்பான சூழ்நிலையில், முகேஷ் குமார் வீசிய கடைசி பந்தை ரஷித் கான் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்தார். ஆனால், அந்த பந்து பேட்டில் சரியாகப் படாததால், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் இடம் சென்றது. இதன் மூலம், டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. குஜராத் அணி கடைசி வரை போராடி தோல்வி அடைந்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: DC vs GT LIVE Score, IPL 2024
நடப்பு சீசனில் இதுவரை 8 ஆட்டத்தில் ஆடியுள்ள டெல்லி 3-ல் வெற்றியும், 5-ல் தோல்வியுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமாகும். உள்ளூரில் நடந்த ஐதராபாத்துக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 266 ரன்களை வாரி வழங்கிய டெல்லி அணியினர் 67 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். தற்போது அதிலிருந்து மீண்டு வர போராடும். அதே சமயம் ஏற்கனவே குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர்களை 89 ரன்னில் மடக்கி டெல்லி அணி வெற்றி கண்டது. இந்த வெற்றி டெல்லிக்கு உத்வேகம் அளிக்கும்.
மறுபுறம், குஜராத் டைட்டன்ஸ் அணி 4 வெற்றி, 4 தோல்வி என்று 8 புள்ளியுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து தடுமாறும் டேவிட் மில்லர் ஃபார்முக்கு திரும்பினால் அந்த அணியின் பேட்டிங் வரிசை மேலும் வலுப்படும். ஏற்கனவே சொந்த ஊரில் டெல்லிக்கு எதிராக மோசமான வீழ்ச்சியை சந்தித்த குஜராத், அந்த தோல்விக்கு அவர்களது இடத்தில் பழிதீர்க்குமா? என்பதே குஜராத் அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் இதுவரை 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் டெல்லி அணி 2ல் வெற்றி பெற்றுள்ளது. குஜராத் அணி 2 முறை வெற்றி பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.