DC vs KKR Highlights: விப்ராஜ் போராட்டம் வீண்: டெல்லி அணியை வீழ்த்தி கொல்கத்தா 4-வது வெற்றி

ஐ.பி.எல் 2025 தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 48-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது.

ஐ.பி.எல் 2025 தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 48-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DC vs KKR LIVE Cricket Score 2025 IPL 48th Match Live Cricket Score updates Delhi Capitals vs Kolkata Knight Riders Axar Patel Ajinkya Rahane Arun Jaitley Stadium Delhi Tamil News

ஐ.பி.எல் 2025: டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல், லைவ் ஸ்கோர், டெல்லி.

10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 48-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: DC vs KKR LIVE Cricket Score, IPL 2025

டாஸ் வென்ற டெல்லி பவுலிங் தேர்வு 

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் - சுனில் நரைன் ஜோடி களமிறங்கிய நிலையில், குர்பாஸ் 28 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். 

Advertisment
Advertisements

களத்தில் இருந்த சுனில் நரைன் - கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஜோடியில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட நரைன் 27 ரன்னுக்கு அவுட் ஆனார். அவருடன் ஜோடியில் இருந்த கேப்டன் அஜிங்க்யா ரஹானே 26 ரன்னில் அவுட் ஆனார். அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் 7 ரன்னில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

இதன் பிறகு இணைந்த  ரிங்கு சிங் - ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி அணியின் விக்கெட் சரிவை மீட்டு சிறப்பாக மட்டையைச் சுழற்றி வந்தார்கள். இதில் அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி 44 ரன்னுக்கு அவுட் ஆகினார். இதன்பின்னர், களத்தில் இருந்த ரிங்கு சிங் -  ஆண்ட்ரே ரஸ்ஸல் ஜோடியில் ரிங்கு சிங் 36 ரன்னில் அவுட் ஆகினார். அடுத்து வந்த ரோவ்மன் பவல் 5 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 204 ரன்கள் எடுத்தது. 

தொடர்ந்து 205 ரனகள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு அபிஷேக் பொரோல் – பாப் டூபிளசிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் பொரோல் 4 ரன்களில் ஆட்டமிழந்தாலும், பாப் டூபிளசிஸ் சிறப்பான தொடக்கம் கொடுத்தார். 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கருண் நாயர் 14 ரன்களும், ராகுல் 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், 5-வது விக்கெட்டுக்கு அக்சர் பட்டேல் களமிறங்கினார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பாப் டூபிளசிஸ், அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 45 பந்துகளை சந்தித்த அவர், 2 சிக்சர் 7 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த கேப்டன் அக்சர் பட்டேல், அரைசதத்தை நெருங்கிய நிலையில் 23 பந்துகளில், 4 பவுண்டரி 3 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டப்ஸ் ஒரு ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய விப்ராஜ் ஒரு பக்கம் போராட மறுமுனையில், அஷூதேஷ் சர்மா 7, ஸ்டார்க் 0 என அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இறுதிக்கட்டத்தில் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய விப்ராஜ், 19 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 38 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்மே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்: 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரோவ்மன் பவல், ஹர்ஷித் ராணா, அனுகுல் ராய், வருண் சக்கரவர்த்தி.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), கருண் நாயர், கேஎல் ராகுல், அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், துஷ்மந்த சமீரா, முகேஷ் குமார்.

நேருக்கு நேர் 

ஐ.பி.எல் தொடரில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை 34 போட்டிகளில் நேருக்கு  நேர் மோதியுள்ளன. இந்த 34 போட்டிகளில் டெல்லி 14 போட்டிகளில் வென்றுள்ளது. அதேநேரத்தில், கொல்கத்தா 18 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டி டிரா ஆனது.  

Kolkata Knight Riders Delhi Capitals Ipl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: