IPL 2021 Qualifier 2, DC vs KKR match highlights in tamil: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றையை 2வது குவாலிஃபைர் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயோன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்ய டெல்லி அணி களமிறங்கியது.
🚨 Toss Update from Sharjah 🚨@KKRiders have elected to bowl against @DelhiCapitals in #VIVOIPL #Qualifier2. #KKRvDC
Follow the match 👉 https://t.co/eAAJHvCMYS pic.twitter.com/OknDzb43Ly— IndianPremierLeague (@IPL) October 13, 2021
டெல்லி அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்த தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோடியில் 1 சிக்ஸர் 2 பவுண்டரிகளை ஓடவிட்ட பிரித்வி ஷா 18 ரன்கள் சேர்த்த நிலையில் வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கி வெளியேறினார். பின்னர் வந்த ஆல்ரவுண்டர் வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் 18 ரன்களுடனும், நீண்ட நேரம் களத்தில் இருந்த தொடக்க வீரர் ஷிகர் தவான் 36 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
#DelhiCapitals 3⃣ down as Shikhar Dhawan departs!
Second wicket for @chakaravarthy29 as @Sah75official takes a fine catch. 👏 👏 #VIVOIPL | #KKRvDC | #Qualifier2 | @KKRiders
Follow the match 👉 https://t.co/eAAJHvCMYS pic.twitter.com/0FokeTuwip— IndianPremierLeague (@IPL) October 13, 2021
இதனால் டெல்லி அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் லோக்கி பெர்குசன் வீசிய 15.2வது ஓவரில் ராகுல் திருப்பாதி வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் நிதானம் காட்ட மறுமுனையில் இருந்த சிம்ரான் ஹெட்மியர் 2 சிக்ஸர்களை பறக்க விட்டு 17 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
Big wicket for @KKRiders! 👏 👏
Lockie Ferguson strikes. 👍 👍#DelhiCapitals lose their captain Rishabh Pant. #VIVOIPL | #KKRvDC | #Qualifier2
Follow the match 👉 https://t.co/eAAJHvCMYS pic.twitter.com/aOzrGowyX1— IndianPremierLeague (@IPL) October 13, 2021
களத்தில் அக்ஸர் பட்டேல் 4 ரன்னுடனும், ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களுடனும் (27 பந்துகளில், 1 சிக்ஸர், 1 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 135 ரன்கள் சேர்த்தது.
INNINGS BREAK
3⃣6⃣ for @SDhawan25
3⃣0⃣* for @ShreyasIyer15
2⃣/2⃣6⃣ for @chakaravarthy29
The @KKRiders chase will begin soon. #VIVOIPL | #KKRvDC | #Qualifier2 | @DelhiCapitals
Scorecard 👉 https://t.co/eAAJHvCMYS pic.twitter.com/0myLPVGvwH— IndianPremierLeague (@IPL) October 13, 2021
தொடர்ந்து 136 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்திருந்தது. எனினும், நிதிஷ் ராணாவின் விக்கெட்டுக்கு பிறகு வந்த அந்த அணியின் மற்ற வீரர்கள் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். கேப்டன் இயோன் மோர்கன் தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், ஷகிப் அல் ஹசன், லோக்கி பெர்குசன் ஆகியோர் பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தனர்.
Solid start for @KKRiders in the chase! 💪 💪@ShubmanGill & Venkatesh Iyer take their side to 51 as the Powerplay comes to an end. 👏 👏 #VIVOIPL | #KKRvDC | #Qualifier2
Follow the match 👉 https://t.co/eAAJHvCMYS pic.twitter.com/Kmbj5UrL4c— IndianPremierLeague (@IPL) October 13, 2021
இதனால் வெற்றியை நோக்கி பயணித்த கொல்கத்தா அணி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருந்து. மேலும், வெற்றி இலக்கை அடையும் வாய்ப்பு பிரகாசமாக பெற இருந்த அந்த அணிக்கு பெருத்த இடி விழுந்தது. முதல் 10 ஓவர்களில் ரன்களை வாரிக்கொடுத்த டெல்லியின் வேகப் பந்துவீச்சாளர்கள் ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நார்ட்ஜே கடைசி ஓவர்களில் அபாரமாக வீசி விக்கெட்டுகளை சாய்ந்தனர். ஆட்டத்தின் இறுதி ஓவரை வீசிய அஸ்வினும் மிகத்துல்லியமாக வீசி கொல்கத்தா அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.
2⃣ wickets in quick succession for @DelhiCapitals! 👍 👍@AnrichNortje02 gets Nitish Rana out while @Avesh_6 dismisses Shubman Gill. 👌 👌 #VIVOIPL | #KKRvDC | #Qualifier2
Follow the match 👉 https://t.co/eAAJHvCMYS pic.twitter.com/rAr3Hg2HoH— IndianPremierLeague (@IPL) October 13, 2021
கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 3 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது களமிறங்கிய சுனில் நரைன் சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் தொற்றியிருந்த பரபரப்பு தொடர்த்திருந்தது. எனினும் நரைனுடன் மறுமுனையில் இருந்த ராகுல் திரிபாதி சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.
WHAT. A. FINISH! 👌 👌 @KKRiders hold their nerve and seal a thrilling win over the spirited @DelhiCapitals in the #VIVOIPL #Qualifier2 & secure a place in the #Final. 👏 👏 #KKRvDC
Scorecard 👉 https://t.co/eAAJHvCMYS pic.twitter.com/Qqf3fu1LRt— IndianPremierLeague (@IPL) October 13, 2021
எனவே டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி. அந்த அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளில் 55 ரன்கள் (3 சிக்ஸர், 3 பவுண்டரி உட்பட) சேர்த்தார். அவருக்கு கைகொடுத்த சுப்மான் கில் 46 ரன்களும், நிதிஷ் ராணா 13 ரன்களும் சேர்த்தனர். சிக்ஸர் அடித்து திரில் வெற்றி பெறச் செய்த ராகுல் திரிபாதி 12 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.
5⃣0⃣ for Venkatesh Iyer! 👏 👏
The @KKRiders left-hander continues to impress. 👍 👍 #VIVOIPL | #KKRvDC | #Qualifier2
Follow the match 👉 https://t.co/eAAJHvCMYS pic.twitter.com/A0z4d8OAmL— IndianPremierLeague (@IPL) October 13, 2021
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திரில் வெற்றியை பதிவு செய்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபில் கிரிக்கெட் தொடரில் 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி நாளை வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
And then there were two... 👀
Two World-Cup winning captains face off in the #IPL2021 final 🔥🔥
Who will come out on top? pic.twitter.com/jwHGtqbUZS— ESPNcricinfo (@ESPNcricinfo) October 13, 2021
ஐபில் கிரிக்கெட் தொடரில் இதுவரை 8 முறை (2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதில் 3 முறை (2010, 2011, 2018) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. தற்போது அந்த அணி 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
KKR have never lost an IPL final yet 😌 pic.twitter.com/mn4x2FIarR
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 13, 2021
அதேவேளையில், 2 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய (2012, 2014) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 23:26 (IST) 13 Oct 2021டெல்லியை வீழ்த்திய கொல்கத்தா; 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது!
டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் திரில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி ஐபில் கிரிக்கெட் தொடரில் 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
- 23:00 (IST) 13 Oct 2021வெற்றியை நோக்கி கொல்கத்தா!
136 ரன்களை துரத்தி வரும் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ள நிலையில் அந்த அணி வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது. கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே தேவை.
- 22:37 (IST) 13 Oct 2021வெங்கடேஷ் ஐயர் அரைசதம்!
136 ரன்களை துரத்தி வரும் கொல்கத்தா அணிக்கு வலுவான ரன்களை சேர்த்து வரும் தொடக்க ஆட்டக்காரர்களில் வெங்கடேஷ் ஐயர் தனது 3வது அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.
மிக நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் 3 சிக்ஸர் 3 பவுண்டரிகளை பறக்க விட்டு 38 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்துள்ளார்.
5⃣0⃣ for Venkatesh Iyer! 👏 👏
— IndianPremierLeague (@IPL) October 13, 2021
The @KKRiders left-hander continues to impress. 👍 👍 vivoipl | kkrvdc | qualifier2
Follow the match 👉 https://t.co/eAAJHvCMYS pic.twitter.com/A0z4d8OAmL - 22:31 (IST) 13 Oct 2021வெங்கடேஷ் ஐயர் அவுட்!
136 ரன்களை துரத்தி வரும் கொல்கத்தா அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்த தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளில் 55 ரன்கள் (3 சிக்ஸர், 3 பவுண்டரி உட்பட)சேர்த்த நிலையில் ககிசோ ரபாடா வீசிய 12.2 ஓவரில் ஸ்மித் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
- 22:20 (IST) 13 Oct 202110 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி!
136 ரன்களை துரத்தி வரும் கொல்கத்தா அணிக்கு வலுவான ரன்களை சேர்த்து வருகிறார்கள் அந்த அணியின் தொடக்க வீரர்கள். எனவே அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 76 ரன்களை சேர்த்துள்ளது.
- 22:00 (IST) 13 Oct 2021பவர் பிளே முடிவில் கொல்கத்தா அணி!
136 ரன்களை துரத்தி வரும் கொல்கத்தா அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்துள்ள நிலையில் சுப்மான் கில் - வெங்கடேஷ் ஐயர் ஜோடி அதிரடியாக ரன்களை சேர்த்து வருகிறது.
பவர் பிளே முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்களை சேர்த்துள்ளது.
- 21:48 (IST) 13 Oct 2021களத்தில் கொல்கத்தா அணி!
136 ரன்களை துரத்தி வரும் கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சுப்மான் கில் - வெங்கடேஷ் ஐயர் ஜோடி அதிரடியாக ரன்களை சேர்த்து வருகிறது.
- 21:21 (IST) 13 Oct 2021டெல்லிக்கு எதிரான ஆட்டம்; கொல்கத்தாவுக்கு 136 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துவரும் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் சேர்த்தது. இதனால் தொடக்கம் முதலே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்த கொல்கத்தா அணிக்கு 136 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Over to our batters now 💪 kkrvdc kkr amikkr ipl2021 pic.twitter.com/vJOrJ0vT7W
— KolkataKnightRiders (@KKRiders) October 13, 2021 - 21:19 (IST) 13 Oct 2021டெல்லிக்கு எதிரான ஆட்டம்; கொல்கத்தாவுக்கு 136 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துவரும் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் சேர்த்தது. இதனால் தொடக்கம் முதலே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்த கொல்கத்தா அணிக்கு 136 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- 20:19 (IST) 13 Oct 202110 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துவரும் டெல்லி அணி நிதான ஆட்டத்தை தொடர்ந்துள்ள நிலையில் 10 ஓவர்கள் முடிவில் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 65 ரன்களை சேர்த்துள்ளது.
- 19:58 (IST) 13 Oct 2021பவர் பிளே முடிவில் டெல்லி அணி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துவரும் டெல்லி அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ள நிலையில் அந்த அணி பவர் பிளே முடிவில் 1 விக்கெட்டை இழந்து 38 ரன்களை சேர்த்துள்ளது.
- 19:55 (IST) 13 Oct 2021டெல்லி அணிக்கு நல்ல தொடக்கம்; பிரித்வி ஷா அவுட்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் 2வது குவாலிஃபைர் சுற்றில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி அணிக்கு தொடக்கம் கிடைத்துள்ளது. 1 சிக்ஸர் 2 பவுண்டரிகளை ஓடவிட்டு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர், பிரித்வி ஷா வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கி வெளியேறினார்.
- 19:16 (IST) 13 Oct 2021டெல்லி அணியில் டாம் கரண் பதில் மார்கஸ் ஸ்டோனிஸ்!
சென்னை அணிக்கெதிரான முதலாவது குவாலிஃபைர் சுற்றில் களமிறங்கிய டெல்லி அணியின் டாம் கரணுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
The 𝘐𝘯𝘤𝘳𝘦𝘥𝘪𝘣𝘭𝘦 arrival we have all been waiting for 🤩
— Delhi Capitals (@DelhiCapitals) October 13, 2021
What are your thoughts on tonight's Playing XI? 💪🏼yehhainayidilli ipl2021 dcvkkr pic.twitter.com/226lcgaVjb - 19:15 (IST) 13 Oct 2021இரு அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல்!
டெல்லி தலைநகரங்கள் (விளையாடும் XI): பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், சிம்ரான் ஹெட்மியர், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நார்ட்ஜே
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (விளையாடும் XI): சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், ஷகிப் அல் ஹசன், லோக்கி பெர்குசன், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி
Team News@KKRiders remain unchanged.
— IndianPremierLeague (@IPL) October 13, 2021
1⃣ change for @DelhiCapitals as Marcus Stoinis named in the team. vivoipl | kkrvdc | qualifier2
Follow the match 👉 https://t.co/eAAJHvCMYS
Here are the Playing XIs 🔽 pic.twitter.com/jV5xOylmml - 19:14 (IST) 13 Oct 2021டெல்லிக்கு எதிரான குவாலிஃபைர் சுற்றில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு!
டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் 2வது குவாலிஃபைர் சுற்றில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. எனவே டெல்லி அணி பேட்டிங் செய்ய களமிறங்கும்.
🚨 Toss Update from Sharjah 🚨@KKRiders have elected to bowl against @DelhiCapitals in vivoipl qualifier2. kkrvdc
— IndianPremierLeague (@IPL) October 13, 2021
Follow the match 👉 https://t.co/eAAJHvCMYS pic.twitter.com/OknDzb43Ly - 19:11 (IST) 13 Oct 2021டெல்லி அணியில் டாம் கரண் பதில் மார்கஸ் ஸ்டோனிஸ்!
சென்னை அணிக்கெதிரான முதலாவது குவாலிஃபைர் சுற்றில் களமிறங்கிய டெல்லி அணியின் டாம் கரணுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- 18:46 (IST) 13 Oct 2021டி-20 உலகக் கோப்பை - அக்ஷருக்கு பதில் ஷர்துல் தாக்கூர்!
டி-20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேலுக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் வீரர் ஷர்துல் தாக்கூர் சேர்ப்பு.
🚨 NEWS 🚨: Shardul Thakur replaces Axar Patel in teamindia's World Cup squad. t20worldcup
— BCCI (@BCCI) October 13, 2021
More Details 🔽 - 18:41 (IST) 13 Oct 2021ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றுவாரா டெல்லியின் தொடக்க வீரர்?
டெல்லியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் இன்றைய ஆட்டத்தில் 76 ரன்கள் எடுத்தால் முதலிடத்தில் உள்ள பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுலை (626 ரன்) பின்னுக்கு தள்ளி ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றலாம்.
- 18:29 (IST) 13 Oct 2021நேருக்கு நேர்!
நடப்பு சீசனில் டெல்லி - கொல்கத்தா அணிகள் சந்தித்த லீக் ஆட்டங்களில் ஒன்றில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும், மற்றொன்றில் கொல்கத்தா 3 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி கண்டது.
- 18:20 (IST) 13 Oct 2021சார்ஜா மைதானம் எப்படி?
டெல்லி - கொல்கத்தா அணிகள் மோதும் இன்றைய ஆட்டம் மந்தமான (ஸ்லோ) ஆடுகளமான சார்ஜாவில் நடக்கிறது. அதனால் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டியது முக்கியம். இங்கு 150 ரன்களுக்கு மேல் எடுத்தாலே சவாலான ஸ்கோராக இருக்கும்.
இந்த மைதானத்தில் 2-வது ‘பேட்’ செய்த அணிகளே பெரும்பாலும் வெற்றிகள் பெற்றிருப்பதால் இன்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். மேலும், இங்கு இதுவரை நடந்துள்ள 9 ஆட்டங்களில் 6-ல் இரண்டாவது ‘பேட்’ செய்த அணிகளே வெற்றி வாகை சூடியிருப்பது கவனிக்கத்தக்கது.
- 18:19 (IST) 13 Oct 2021‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
இன்றிரவு 7:30 மணிக்கு சார்ஜாவில் நடக்கும் 2வது குவாலிஃபைர் சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Hello & welcome from Sharjah for vivoipl qualifier2 👋
— IndianPremierLeague (@IPL) October 13, 2021
With a place in the final up for grabs, @Eoin16's @KKRiders square off against the @RishabhPant17-led @DelhiCapitals. 👍 👍 kkrvdc
Which team will come out on top tonight❓ 🤔 🤔 pic.twitter.com/lLRUKHj2hL
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.