DC vs MI Live Score, IPL 2025: ரன் அவுட் ஆகி கோட்டைவிட்ட டெல்லி கேபிடல்ஸ்... மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!

DC vs MI Live Score Updates18வது ஐ.பி.எல் சீசனில் 29வது லீக் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியாக டெல்லியில் அருண் ஜேட்லி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது.

DC vs MI Live Score Updates18வது ஐ.பி.எல் சீசனில் 29வது லீக் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியாக டெல்லியில் அருண் ஜேட்லி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dc vs mi

DC vs MI Live

DC vs MI Live Score Updates, IPL 2025: 18வது ஐ.பி.எல் சீசனில் 29வது லீக் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியாக டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: 

இந்த ஐ.பி.எல் தொடரில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றி பெற்றும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் 1 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடனும் மோதியது.

டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஸர் படேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது.

Advertisment
Advertisements

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ரிக்கல்டன் களமிறங்கினர். ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை தொடங்கிய வேகத்திலேயே முடிந்து போனது. 18 ரன்களில் ஆட்டமிழந்து ரோகித் சர்மா ஏமாற்றம் அளித்தார்.அடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். 

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் அதிரடியாக விளையாடி 41 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து, சூர்யகுமார் யாதவ்  உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. நன்றாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 2 ரன்கள் மட்டுமே அவுட் ஆகி வந்த வேகத்திலேயே திரும்பிச் சென்றார். அடுத்து வந்த நமன் திர் அதிரடியாக விளையாடினார். சிக்சர் ஃபோர் என்று பறக்கவிட்ட திலக் வர்மா 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் நமன் திர் 38 ரன்களுடனும், வில் ஜாக்ஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். டெல்லி கேபிடல்ஸ் அணியில், குல்தீப் யாதவ் மற்றும் விப்ராஜ் நிகாம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் பிரசர் மற்றும் அபிஷேக் போரேல் பேட்டிங் செய்ய களமிறங்கினர். ஜாக் பிரசர் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து அவுட் ஆனது டெல்லிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அடுத்து கருண் நாயர் வந்தார்.

கருண் நாயர் தனது அதிரடியாக ஆடி, 22 பந்துகளில் தனது அரைசதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி டெல்லி அணியின் ரன்ரேட் வேகமாக உயர்த்தியது. ஆனால், கரண் சர்மா சிறப்பாக பந்துவீசி, இந்த ஜோடியைப் பிரித்தார். அபிசேக் பொரேல் 33 ரன்கள் எடுத்து நமன் திர் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்து கே.எல்.ராகுல் வந்து கருண் நாயருடன் ஜோடி சேர்ந்தார். வேகமாக ரன் குவித்த கருண் நாயர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 40 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து மிட்செல் சாண்ட்னர் பந்தில் போல்ட் அவுட் ஆனார்.

அடுத்து வந்த அக்சர் பட்டேல் 9 ரன்னும், ஸ்டப்ஸ் 1 ரன்னும், கே.எல்.ராகுல் 15 ரன்களும், விப்ராஜ் நிகம் 14 ரன்களும், அசுதோஷ் சர்மா 17 ரன்களும், குல்தீப் யாதவ் 1 ரன்னும், மொகித் சர்மா (0) ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதில் 8 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா ரன் அவுட் ஆனதன் மூலம் 19 ஓவர்கள் முடிவில் டெல்லி ஆல் அவுட் ஆகி வெற்றியைக் கோட்டை விட்டது. இதன் மூலம், டெல்லி கேபிடல்ஸ் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்ததால் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய கரண் சர்மா 3 விக்கெட்டுகளும், மிட்செல் சாண்ட்னர் 2 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதே நேரத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

திறமையான பேட்டர்கள் மற்றும் தரமான பந்து வீச்சாளர்களின் கலவையுடன். கேப்டன் அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் மிட்செல் ஸ்டார்க்குடன் பந்துவீச்சு தாக்குதலை வழிநடத்தும் அதே வேளையில், கே.எல். ராகுலின் புத்துணர்ச்சியூட்டும் மிடில்-ஆர்டர் பங்கு பேட்டிங் வரிசையை வலுப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்மால் போராடும் டாப்-ஆர்டர் பேட்டிங்கில் பெல்டர் உதவி செய்வார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நம்புகிறது. ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் வேகப்பந்து வீச்சுக்கு தலைமை தாங்குவதாலும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மிடில் ஓவர்களை திறமையாக கையாளுவதாலும், டெல்லியில் நடைபெறும் மோதலுக்கு மும்பை அணி பந்தை சிறப்பாக கையாள வாய்ப்புள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள்:

ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், அபிஷேக் போரெல், கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல்(கேப்டன்), அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், மோஹித் சர்மா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன்(w), வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேட்ச்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா

Dc Vs Mi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: