IPL 2023,DC vs RCB Cricket Match Highlights in tamil: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று இரவு 7:30 மணிக்கு டெல்லியில் தொடங்கிய 50 வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மோதுகின்றன.
பெங்களூரு பேட்டிங் தேர்வு; டெல்லி பவுலிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், டெல்லி அணி பந்துவீசும்.
பெங்களூரு பேட்டிங்
பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி மற்றும் டூபிளசிஸ் களமிறங்கினார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். இருவரையும் பிரிக்க முடியாமல் டெல்லி பந்துவீச்சாளர்கள் திணறினர். 10.3 ஓவர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி 82 ரன்களில் பிரிந்தது. டூபிளசிஸ் 45 ரன்களில் அவுட் ஆனார். அவர் மார்ஷ் பந்தில் அக்சரிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் முதல் பந்திலே டக் அவுட் ஆகி வெளியேறினார். அவர் மார்ஷ் பந்தில் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்தார்.
அடுத்ததாக கோலியுடன் லோம்ரோர் ஜோடி சேர்ந்தார். லோம்ரோர் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசி ரன் குவித்தார். இதற்கிடையில் கோலி அரை சதம் அடித்தார். அணியின் எண்ணிக்கை 137 ரன்களாக இருந்தப்போது கோலி 55 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் ஒரு சிக்சருடன் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக அனுஜ் களமிறங்கினார். மறுமுனையில் ஆடி வந்த லோம்ரோர் சிறப்பாக ஆடி அரை சதம் விளாசினார்.
இந்தநிலையில் பெங்களூரு அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. லோம்ரோர் 54 ரன்களுடனும், அனுஜ் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். டெல்லி தரப்பில் மார்ஷ் 2 விக்கெட்களையும், கலீல் மற்றும் முகேஷ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
டெல்லி பேட்டிங்
டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் பிலிப் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். இருவரும் 5 ஓவர்களில் 60 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக ஆடி வந்த வார்னர் 6 ஆவது ஓவரின் முதல் பந்தில் 22 ரன்களில் அவுட் ஆனார். அவர் ஹேசல்வுட் பந்தில் டுபிளசிஸிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து வந்த மிட்சல் மார்ஷ் சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகள் விளாசி 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஹர்சல் பட்டேல் பந்தில் லோம்ரோரிடம் கேட்ச் கொடுத்தார். இதற்கிடையில் சிறப்பாக விளையாடிய பிலிப் அரை சதம் விளாசினார்.
அடுத்ததாக ரீலே ரோசோ களமிறங்கினார். ரீலே சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினார். பிலிப் – ரீலே ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தியது. டெல்லி அணி 171 ரன்கள் எடுத்திருந்தப்போது பிலிப் 87 ரன்களில் அவுட் ஆனார். அவர் கரண் சர்மா பந்தில் போல்டானார். 45 பந்துகளைச் சந்தித்த பிலிப் 6 சிக்சர் மற்றும் 8 பவுண்டரிகள் விளாசினார். அடுத்தாக அக்சர் படேல் களமிறங்கினார். அக்சர் ஒரு சிக்சருடன் 8 ரன்கள் எடுக்க டெல்லி அணி வெற்றி பெற்றது.
டெல்லி அணி 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரீலே 35 ரன்களுடன் அக்சர் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ரீலே 3 சிக்சர் மற்றும் 1 பவுண்டரி விளாசினார். இதனையடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. பெங்களூரு அணியில் ஹேசல்வுட், கரண் சர்மா, ஹர்சல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் பின்வருமாறு:
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், மணீஷ் பாண்டே, அமன் ஹக்கிம் கான், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், வனிந்து ஹசரங்கா, கர்ன் ஷர்மா, முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
DC vs RCB Highlights: பிலிப் அதிரடி; பெங்களூரு அணியை எளிதாக வீழ்த்திய டெல்லி
கோலி, லோம்ரோர் அதிரடியால் 181 ரன்கள் சேர்த்த பெங்களூரு; பிலிப் அதிரடியால் 16.4 ஓவர்களிலே வென்ற டெல்லி; 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
Follow Us

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.