DC vs RCB: விராட் கோலி, க்ருணால் பாண்ட்யா அதிரடி... டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

IPL 2025, DC vs RCB Score: ஐ.பி.எல் 2025 தொடரின் 46-வது லீக் போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே டெல்லியில் அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது.

IPL 2025, DC vs RCB Score: ஐ.பி.எல் 2025 தொடரின் 46-வது லீக் போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே டெல்லியில் அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rcb

DC vs RCB Score Updates: டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பலப்பரீட்சை

IPL 2025, DC vs RCB Score Updates: ஐ.பி.எல் 2025 தொடரின் 46-வது லீக் போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் ஞாயிறுக்கிழமை (28.04.2025) இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இதில் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் பொரெல் மற்றும் ஃபாஃப் டுபிளெசிஸ் பேட்டிங் செய்ய களமிறங்கினர். இருவரும் அதிரடியாக அடித்து ஆடினார்கள். அபிஷேக் பொரெல் 28 ரன்களில் ஜோஸ் ஹேலில்வுட் பந்தில் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த கருண் நாயர் 4 ரன்களில் யஷ் தயாள் பந்தில் புவனேஷ் குமாரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த கே.எல். ராகுல் அதிரடியாக அடித்து ஆடினார்.

ஆனால், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஃபாஃப் டுபிளெசிஸ் 22 ரன்களில் க்ருணால் பாண்ட்யா பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த அக்சர் படேல் 15 ரன்னில் ஹேஸில்வுட் பந்தில் போல்ட் அவுட் ஆனார். அடுத்து வந்த ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக ஆடினார். 

Advertisment
Advertisements

கே.எல். ராகுல் 41 ரன்கள் எடுத்த நிலையில், புவனேஷ்குமார் பந்தில் ஜேக்கப் பெத்தேல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த அசுதோஷ் சர்மா புவனேஷ் குமார் பந்தில் போல்ட் அவுட் ஆனார். 

ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்னிலும் விப்ராஜ் நிகம் 12 ரன்களிலும் அவுட் ஆனார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கச்சிதமான பந்துவீச்சில் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல் பேட்டிங் செய்தனர்.

அதிரடியாக விளையாடத் தொடங்கிய ஜேக்கப் பெத்தேல் 12 ரன்களில் அக்சர் படேல் பந்தில் க்ருணால் நாயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல், அக்சர் படேல் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ரஜத் பட்டிதார் 6 ரன்கள் எடுத்திருந்தபோது, ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த க்ருணால் பாண்ட்யா, விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். 

விராட் கோலி நிதானமாக விளையாட க்ருணால் பாண்ட்யா அதிரடியாக விளையாடினார். விராட் கோலி 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த நிலையில், துஷ்மந்தா சமீரா பந்தில் மிட்செல் ஸ்டார்க் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து டிம் டேவிட் பேட்டிங் செய்ய வந்தார். அதிரடியாக அடித்து விளையாடிய க்ருணால் பாண்ட்யா அரை சதம் அடித்தார். 

க்ருணால் பாண்ட்யா - டிம் டேவிட் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

க்ருணால் பாண்ட்யா 47 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 73 ரன்களும் டிம் டேவிட் 5 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 19 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காம்ல் இருந்தனர்.

Royal Challengers Bangalore Delhi Capitals Ipl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: