Advertisment

DC vs RR LIVE Score, IPL 2024: ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது டெல்லி- 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

IPL 2024- ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
DC vs RR LIVE Score IPL 2024 56 match today Delhi Capitals vs Rajasthan Royals scorecard updates in tamil

ஐ.பி.எல். 2024 டெல்லி கேபிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024 | Delhi Capitals | Rajasthan Royals: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7:30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்கிய  56 லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் -  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: DC vs RR LIVE Score, IPL 2024

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விபரம்

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரியான் பராக், டோனோவன் ஃபெரீரா, ரோவ்மேன் பவல், ஷுபம் துபே, ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்

டெல்லி கேப்பிடல்ஸ்: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்பாடின் நைப், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது

டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்

டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக ஜேக் மற்றும் அபிஷேக் களமிறங்கினர். ஜேக் தொடக்கம் முதலே பவுண்டரி மழை பொழிந்தார். 19 பந்தில் அரை சதம் விளாசிய ஜேக், அடுத்த பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹோப் ஒரு ரன்னில் வெளியேறினார். அடுத்து அக்சர் களமிறங்கிய நிலையில், மறுமுனையில் ஆடி வந்த அபிஷேக் அரை சதம் விளாசினார். அக்சர் 15 ரன்களில் அவுட் ஆக, ரிஷப் களமிறங்கினார். ரிஷப் களமிறங்கிய சிறிது நேரத்தில் அபிஷேக் 65 ரன்களில் அவுட் ஆனார். 

அடுத்து களமிறங்கிய ஸ்டப்பஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினார். ரிஷப் பண்ட் 15 ரன்களில் அவுட் ஆக நைப் களமிறங்கினார். நைப் 19 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து ரஷீக் களமிறங்கி 8 ரன்கள் எடுத்த நிலையில், டெல்லி அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஸ்டப்பஸ் 41 ரன்களுடன் களத்தில் இருந்தார். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்களையும், போல்ட் மற்றும் சஹல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

ராஜஸ்தான் ராயல்ஸ்

222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி, முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டினை இழக்க பவர் பிளேவின் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ஜாஸ் பட்லர் தனது  விக்கெட்டினை இழந்தார்.

கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரியான் பராக் 27 ரன்கள், ஷுபம் துபே 25 ரன்கள் போன்ற மிடில் விக்கெட் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன் குவிப்பை எடுக்க தவறியதோடு, விக்கெட்டையும் விரைவாக இழந்தனர்.

எனினும், சஞ்சு சாம்சன் அதிரடி காண்பித்து 86 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்பின் தொடர்ச்சியான விக்கெட் சரிவு ஏற்பட்டது. இதனால், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இதன்மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றிபெற்றது.

டெல்லி கேபிடல்ஸ் தரப்பில் கலீல் அகமது, முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Delhi Capitals Rajasthan Royals IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment