DC vs RR match highlights in tamil: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (சனிக்கிழமை) மாலை 3:30 மணிக்கு அபுதாபியில் நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ப்ரித்வி ஷா- ஷிகர் தவான் களமிறங்கினர்.
டெல்லி அணிக்கு இந்த ஜோடி வலுவான தொடக்கம் கொடுக்கும் என எதிர்பார்க்கையில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 ரன்னில் ராஜஸ்தான் வீரர் கார்த்திக் தியாகி பந்து வீச்சில் வெளியேறினார். அவருடன் மறுமுனையில் ஆடிய ப்ரித்வி ஷா 10 ரன்கள் எடுத்த நிலையில் சேதன் சகரியா பந்து வீச்சில் அவுட் ஆனார்.
இவர்களைத் தொடர்ந்து களம் கண்ட ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி அந்த அணியின் ரன் ரேட்டை உயர்த்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடியில் சற்று நிதானத்தை கடைபிடித்த கேப்டன் ரிஷப் பண்ட் 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் மறுமுனையில் அதிரடி காட்டி வந்த ஆடிய ஷ்ரேயாஸ் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தெவாட்டியா பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.
பின்னர் வந்த ஷெம்ரான் ஹிட்மயர் 28 ரன்களுடனும், அக்சர் படேல் 12 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். 1 பவுண்டரியை விரட்டிய லலித் யாதவ் 12 ரன்னுடனும், அஸ்வின் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் அணியின் ரஹ்மான் மற்றும் சகரியா தலா 2 விக்கெட்டுகளையும், கார்த்திக் தியாகி மற்றும் ராகுல் தேவாடியா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 155 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லியாம் லிவிங்ஸ்டோன் (1) மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (5) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இவர்களது விக்கெட்டுக்கு பிறகு வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் நிதான ஆட்டத்தை தொடர்ந்தார்.
5⃣0⃣ for @IamSanjuSamson! 👍 👍
— IndianPremierLeague (@IPL) September 25, 2021
The @rajasthanroyals captain is putting up a fight here in Abu Dhabi. 👌 👌 #VIVOIPL #DCvRR
Follow the match 👉 https://t.co/SKdByWvPFO pic.twitter.com/XAy4iW7Xyy
ஆனால் அவருடன் மறுமுனையில் இருந்த டேவிட் மில்லர் 7 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இவரது விக்கெட்டுக்கு பிறகு வந்த மஹிபால் லோமோர் 1 சிக்ஸரை பறக்க விட்டு 19 ரன்னில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணி இப்படி தொடர் விக்கெட் சரிவை சந்தித்து வந்த நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சன் – ராகுல் தேவாடியா ஜோடி சிறிது நேரம் தடுத்து நிறுத்தியது. இந்த ஜோடியில் மிகவும் நித்தமனாக ஆடிய ராகுல் தேவாடியா டெல்லியின் அன்ரிச் நார்ட்ஜே வீசிய 17.2 ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
டெல்லி அணி, பந்து வீச்சில் தொடர் தாக்குதலை தொடுத்து நெருக்கடி கொடுத்ததால் ராஜஸ்தான் அணியால் 20 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 121 ரன்களை மட்டுமே எடுத்தது. தனி ஒருவனாக போராடிய கேப்டன் சஞ்சு சாம்சனின் ஆட்டம் (70 ரன்கள்) வீணானது. இதன் மூலம் ராஜஸ்தான் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அபார வெற்றி பெற்றது.
Winners are grinners! ☺️@DelhiCapitals seal a comfortable win over #RR in Match 36 of the #VIVOIPL. 👍 👍#DCvRR
— IndianPremierLeague (@IPL) September 25, 2021
Scorecard 👉 https://t.co/SKdByWvPFO pic.twitter.com/xltkDgWv5V
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil