IPL 2024 | Delhi Capitals | Sunrisers Hyderabad: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (சனிக்கிழமை) இரவு 7:30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்கும் 35-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: DC vs SRH LIVE Score, IPL 2024
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விவரம்
டெல்லி கேபிடல்ஸ்: டேவிட் வார்னர், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் தலைவர், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்
ஹைதராபாத் பேட்டிங்
ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் களமிறங்கினார். இருவரும் டெல்லி பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். சிறப்பாக ஆடி ஹெட் அரை சதம் விளாசினார். மேலும் பவர் ப்ளேயில் அதிக ரன்கள் (125 ரன்கள்) குவித்த அணியாக ஹைதராபாத் சாதனை படைத்தது. தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. அபிஷேக் 12 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 6 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து களமிறங்கிய மார்க்ரம் 1 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த கிளாசன் களமிறங்கிய நிலையில், ஹெட் 32 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 6 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும். மூவரது விக்கெட்டையும் குல்தீப் வீழ்த்தினார். அடுத்து நிதிஷ் களமிறங்கிய நிலையில், கிளாசன் 2 சிக்சர்களுடன் 15 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து நிதிஷ் உடன் அகமது ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடி ரன் குவித்தனர். நிதிஷ் 37 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து சமத் களமிறங்கி 13 ரன்களில் வெளியேறினார். அடுத்து கம்மின்ஸ் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். இதற்கிடையில் அகமது அரை சதம் அடித்தார். வாஷிங்டன் சுந்தர் களமிறங்கிய நிலையில் ஹைதராபாத் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்துள்ளது. அகமது கடைசி வரை ஆட்டமிழக்காமல், 29 பந்துகளில் 59 ரன்கள் அடித்திருந்தார். இதில் 5 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும். டெல்லி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்களையும், முகேஷ் மற்றும் அக்சர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
டெல்லி பேட்டிங்
டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் பிரித்வி 16 ரன்களிலும், வார்னர் ஒரு ரன்னிலும் அவுட் ஆகினார். அதிரடியாக ஆடிய ஜேக் 18 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அபிஷேக் 42, பண்ட் 44 ரன்கள் எடுத்தனர், மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினார்.
இதனால் டெல்லி அணி 19.1 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக நடராஜன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி நடப்பு சீசனில் இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 3 வெற்றி (சென்னை, லக்னோ, குஜராத்துக்கு எதிராக), 4 தோல்வி (பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா, மும்பைக்கு எதிராக) என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. அந்த முந்தைய ஆட்டத்தில் குஜராத்தை வெறும் 89 ரன்னில் சுருட்டி டெல்லி மெகா வெற்றி பெற்றது.
மறுபுறம், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (மும்பை, சென்னை, பஞ்சாப், பெங்களூரு), 2 தோல்வியுடன் (கொல்கத்தா, குஜராத்துக்கு எதிராக) 8 புள்ளிகள் பெற்றிருக்கிறது. இந்த சீசனில் விசுவரூபம் எடுத்துள்ள அந்த அணி மும்பைக்கு எதிராக 277 ரன்னும், பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்னும் குவித்து ஐ.பி.எல். கிரிக்கெட்டில் யாரும் எட்டிராத ஸ்கோரை திரட்டி வரலாறு படைத்தது.
நடப்பு சீசனில் டெல்லியில் நடக்கும் முதல் போட்டி என்பதால், சொந்த அணியை வரவேற்க உள்ளூர் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். அதேநேரத்தில், டெல்லி பவுலர்களை வெளுத்து வாங்க ஐதராபாத் பேட்டர்கள் வரிந்து கட்டுவார்கள். இதனால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
நேருக்கு நேர்
ஐ.பி.எல். தொடரில் டெல்லி - ஐதராபாத் அணிகள் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11-ல் டெல்லியும், 12-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.