/tamil-ie/media/media_files/uploads/2020/09/dean-jones-australia.jpg)
Dean Jones Death Tamil News: ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் திடீரென மும்பையில் மரணம் அடைந்தார். எவ்வித உடல்நலப் பிரச்னையும் இல்லாமல், ஐபிஎல் வர்ணனைப் பணிகளுக்காக இந்தியா வந்திருந்த அவர் மாரடைப்பில் மரணம் அடைந்திருப்பது விளையாட்டு உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ். வயது 59. கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். ஒருநாள் போட்டிகளில் சிறந்த பேட்டிங் ஆவரேஜ் வைத்திருந்தவர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபிறகு, கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனையாளராக இயங்கி வந்தார்.
ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கும் இவர் வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார். தெற்கு மும்பையில் ஒரு ஹோட்டலில் இவர் தங்கியிருந்தார். இன்று காலை 11 மணிக்கு உணவு எடுத்துக் கொண்டிருக்கிறார். பிறகு இன்றைய போட்டி வர்ணனைப் பணிகள் குறித்து தனது குழுவினருடன் சிறிது உரையாடியிருக்கிறார். தொடர்ந்து தனது குழுவினருடன் ஹோட்டல் லாபியில் உரையாடியபடி இருந்தார்.
பிற்பகலில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. யாரும் எதிர்பாராத விதமாக அவர் மரணம் அடைந்தார். இந்த துயரம் குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கிரிக்கெட் உலகினர் பலரும் டீன் ஜோன்ஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.