scorecardresearch

‘தீப்தி ஷர்மா ஏமாற்றுப் பேர்வழியா? நீங்க இதைப் பேசலாமா முகமது ஆசிஃப்?’ காரசார ட்ரோல்

Former Pakistan cricketer Mohammad Asif tweet endlessly trolled for criticising Deepti Sharma Tamil News: இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவை தனது ட்வீட் மூலம் விமர்த்துள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆசிப்பை கிரிக்கெட் ரசிகர்கள் படு பயங்கரமாய் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

‘தீப்தி ஷர்மா ஏமாற்றுப் பேர்வழியா? நீங்க இதைப் பேசலாமா முகமது ஆசிஃப்?’ காரசார ட்ரோல்
Deepti Sharma – Mohammad Asif

News about Deepti Sharma in tamil: இங்கிலாந்து சுற்றுப்பயணமாக சென்ற இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. இதில் டி-20 தொடரில் 2-1 என்கிற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணி வென்றது. இதனிடையே, கடந்த 18 ஆம் தேதி முதல் நடந்த ஒருநாள் தொடரின் 3 ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்த இந்திய மகளிர் அணி, தொடரை கைப்பற்றி இங்கிலாந்தை வாஷ் – அவுட் செய்தது. இந்த அசத்தலான வெற்றியின் மூலம் இங்கிலாந்து மண்ணில் வரலாறு படைத்துள்ளது இந்திய மகளிர் அணி.

மன்கட் முறையில் அவுட்… வெடித்த புதிய சர்ச்சை…

இந்நிலையில், இந்தியா இங்கிலாந்து மகளிர் அணி மோதிய 3-வது மற்றும் கடைசி போட்டி, கடந்த சனிக்கிழமை, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி 38 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது தனது 43-வது ஓவரை வீச வந்தார் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா. அவர் பந்து வீசியபோது பேட்டிங் திசையின் எதிர் முனையில் (நான்-ஸ்ட்ரைக்கரில்) இருந்த இங்கிலாந்து வீராங்கனை சார்லீ டீனை ரன் அவுட் செய்தார். அதாவது, மன்கட் முறையில் அவுட் செய்து இருந்தார் தீப்தி சர்மா.

ஐ.சி.சி.யின் புதிய கிரிக்கெட் விதிகளின்படி, மன்கட் முறையில் அவுட் செய்வது தற்போது ரன் அவுட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இங்கிலாந்து மற்றும் மற்ற கிரிக்கெட் ஆடும் நாடுகளின் முன்னாள் வீரர்கள் பலரும் இதனை விமர்சித்து வருகின்றனர். மேலும் ‘ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்’ விவாதத்தையும் இந்த சம்பவம் தூண்டியுள்ளது. எனினும், இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவிற்கு ஆதரவாகவும் பல வீரர் வீராங்கனைகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தீப்தி சர்மாவை விமர்சித்து வரும் மூத்த வீரர்கள் மற்றும் விளையாட்டின் நிபுணர்களுடன் இணைந்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆசிப் விமர்த்துள்ளார். ஆனால் அவரது விமர்சன ட்வீட்டை கிரிக்கெட் ரசிகர்கள் படு பயங்கரமாய் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

ஆசிப் தனது ட்விட்டர் பதிவில், “பந்தை வீசும் எண்ணம் இல்லை என்பதை நாம் தெளிவாகக் காண்கிறோம். அவர் அவரை ஏமாற்றுவதற்காக ஸ்ட்ரைக்கர் அல்லாத பேட்டரை நோக்கிப் பார்க்கிறார். இது மிகவும் நியாயமற்ற மற்றும் பயங்கரமான மோசமான செயல். #mankading #mankad #Cheater #INDvsENG,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். என்று பதிவிட்டு, தீப்தி பந்து வீசும் நோக்கத்தைக் காட்டாமல் “ஏமாற்றியதாக” குற்றம் சாட்டும் முயற்சியில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட படத்தை வெளியிட்டு இருந்தார்.

இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் சிலர் அவர் சரிபார்ப்பதற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட வீடியோவை மீண்டும் பகிர்ந்து இருந்தனர். எனினும் பெரும்பாலானவர்கள் அவர் 2011ல் ஈடுபட்ட ஸ்பாட் பிக்சிங் ஊழலை நினைவுபடுத்தும் விதமாக, அவர் ஐசிசி மற்றும் பாகிஸ்தான் வாரியத்திடம் பொதுவெளியில் மன்னிப்பு கேட்ட வீடியோவை பகிர்ந்து கமெண்ட் செய்துள்ளனர்.

அதில், ஒரு ரசிகர் “பணத்துக்காக நாட்டுக்கு துரோகம் இழைத்த கிரிக்கெட் வீரர், ஜென்டில்மேன் போல் பேசுகிறார் 🤣🤣🤣🤣. நண்பரே நலமா 🤣🤣🤣🤣” என்று கேட்டு பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர், “ஃபிக்ஸர் ஸ்பிரிட் பற்றி பேசுகிறார் …” என்று கமெண்ட் செய்துள்ளார்.

இன்னும் ஒரு ரசிகர், அன்புள்ள மேட்ச் ஃபிக்ஸர், முஹம்மது ஆசிஃப், அநியாயம் எதுவும் இல்லை, யாரும் ஏமாற்றவில்லை, இந்தச் செயல் முற்றிலும் உலக கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டது. பாகிஸ்தான் வீரர்கள் எப்போதுமே விளையாட்டு உணர்வை கெடுக்கிறார்கள் என்பது உலகம் அறிந்ததே.” என்று குறிப்பிட்டு அவர் பதிவிட்டுள்ளார்.

இன்னொரு ரசிகர், “ஆமாம் மேட்ச் ஃபிக்ஸிங் தான் உண்மையான ஸ்பிரிட் மற்றும் விளையாட்டு! ஆசிஃப் உங்களுக்கு அதிக சக்தி கிடைக்கும்” என்று கூறி பதிவிட்டுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Deepti sharma row mohammad asif endlessly trolled for calling cheater tamil news