மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறும் மகளிர் பிரீமியர் லீக் 2023 இன் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பை இந்தியன்ஸை இன்று (மார்ச் 26) எதிர்கொள்கிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் (DC vs MI WPL 2023) இறுதிப் போட்டி நடைபெற்றது.
டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டும் லீக் கட்டத்தை தலா 12 புள்ளிகளுடன் முடித்து WPL 2023 புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தன.
DC அவர்களின் உயர்ந்த நிகர ரன் ரேட் (NRR) மூலம் இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைந்தது, MI கூடுதல் முற்றத்தில் சென்று எலிமினேட்டரில் UP Warriorz-ஐ தோற்கடிக்க வேண்டியிருந்தது.
ஏற்கனவே நடந்த ஆட்டத்தில், டெல்லி
இரு அணியின் உத்தேச வீராங்கனைகள் விவரம் வருமாறு:
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
மெக் லானிங்(சி), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் கேப், ஆலிஸ் கேப்ஸி, ஜெஸ் ஜோனாசென், அருந்ததி ரெட்டி, தனியா பாட்டியா(வ), ராதா யாதவ், ஷிகா பாண்டே, பூனம் யாதவ், ஜாசியா அக்தர், லாரா ஹாரிஸ், தாரா மணி நோரிஸ், , அபர்ணா மோண்டல், டைட்டாஸ் சாது, சினேகா தீப்தி
மும்பை இந்தியன்ஸ்:
ஹேலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா(வ), நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர்(சி), மெலி கெர், பூஜா வஸ்த்ரகர், இஸ்ஸி வோங், அமன்ஜோத் கவுர், ஹுமைரா காசி, ஜிந்திமணி கலிதா, சைகா இஷாக், ஹீதர் கிரஹாம், க்ளோ ட்ரையன், தாரா குஜ்ஜர், சோனம் யாதவ், நீலம் பிஷ்ட், பிரியங்கா பாலா<
டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீராங்கணைகளாக, மெக் லேனிங்கும் ஷஃபாலி வெர்மாவும் களம் இறங்கினர். ஷஃபாலி வெர்மா 2-வது ஓவரில் 11 ரன் எடுத்திருந்த நிலையில் ஐசி வாங் பந்தில் அமன்ஜோத் கவுரிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனர். அடுத்து வந்த அலைஸ், ஐசி வாங் பந்தில் அமன்ஜோத் இடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 ரன் மட்டுமே எடுத்து ஐசி வாங் பந்தில் ஹேய்லி மேத்யூவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுகிறது.
இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் கோப்பையை மும்பை இண்தியன்ஸ் அணி தட்டிச் சென்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/