India vs England, 5th Test, Dharamsala: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது.
இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வருகிற 7 ஆம் முதல் தொடங்கி நடைபெற உள்ளது.
இந்நிலையில், தர்மசாலாவில் நடைபெறும் போட்டியின் போது மழை குறுக்கீடு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தர்மசாலா நகரில் தொடர்ச்சியான மழை, பனிப்பொழிவு மற்றும் குறைந்த வெப்பநிலை நிலவி வருவதால், போட்டி முழுவதுமாக நடப்பதில் அச்சம் இருக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) உள்ளூர் வானிலை முன்னறிவிப்பின்படி, முதல் இரண்டு நாட்களுக்கு லேசான மழையுடன், டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில் வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்று தெரிவிக்கிறது.
இதற்கிடையில், அக்குவெதர்.காம் (Accuweather. com) இணைய பக்கத்தின் படி, பிற்பகல் இடியுடன் கூடிய மழை முதல் நாளில் 82 சதவீத மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கிறது. இந்த போட்டியின் போது பனிப்பொழிவு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான சூரிய ஒளியுடன் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் நாட்களில் வெப்பநிலை சற்று அதிகரிக்கக்கூடும் என்றாலும், ஐந்தாவது நாளில் (மார்ச் 11, திங்கள்) மழை மீண்டும் வரக்கூடும், ஒரு நாளில் கணிசமாக மேகமூட்டமாக இருக்கும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Dharamsala weather update, IND vs ENG: Will rain play spoilsport in India vs England 5th Test?
இந்தியா மற்றும் இங்கிலாந்து 5வது டெஸ்ட் போட்டிக்கான அணிகள்
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரிட் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா , அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.
இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, ஷோயிப் பஷீர், சாக் கிராலி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), டான் லாரன்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஆலி போப், ஒல்லி ராபின்சன், ஜோ ரூட், மார்க் வூட்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“