/tamil-ie/media/media_files/uploads/2020/02/a39-2.jpg)
தோனி... தோனி... எனும் இந்த மந்திரப் பெயரை கேட்டே ரொம்ப நாளாகிவிட்டது. உலகக் கோப்பைக்கு பிறகு அவர் எந்த சர்வதேச தொடரிலும் விளையாடவில்லை. பிசிசிஐ-யே அவர் மீண்டும் விளையாட வருவாரா, மாட்டாரா என்று புரியாமல் இருக்க, எதிர்வரும் ஐபிஎல் தொடரில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார் தோனி.
ஏற்கனவே, ஐபிஎல் 2020 தொடருக்கான விளம்பர ஷூட்டிங் பணிகள் தொடங்கிவிட்டன. அதில், தோனி நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார். சில மாதங்களாக தோனியின் ஆட்டத்தைக் காணாத ரசிகர்களுக்கு வருகிற மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஐ.பி.எல் தொடர் இரட்டிப்பு விருந்தாக அமையவுள்ளது.
வா தல... வா தல.. மோடில் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க, தோனியின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, பாத்ரூமில் அமர்ந்து தோனி பாட்டுப் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
18, 2020.@msdhoni’s mehfil-e-bathroom????
Video Courtesy: @viralbhayani77#Dhoni#MSDhoni#MumbaiDiarypic.twitter.com/VUgBJAFhbd
— MS Dhoni Fans Official (@msdfansofficial)
.@msdhoni’s mehfil-e-bathroom????
— MS Dhoni Fans Official (@msdfansofficial) February 18, 2020
Video Courtesy: @viralbhayani77#Dhoni#MSDhoni#MumbaiDiarypic.twitter.com/VUgBJAFhbd
வீடியோவில், இந்திய கிரிக்கெட் வீரர்களான பியூஷ் சாவ்லா, பார்த்தீவ் பட்டேல் உள்ளிட்ட சிலருடன் கழிவறையில் அமர்ந்தபடி "mere mehboob qayamat hogi" பாடலைப் பாடி, அதனை சக வீரர்களுக்கும் கற்றுகொடுக்கிறார்.
எந்த ஏரியாவா இருந்தாலும் அங்க தல தான் மாஸ்டர்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.