Advertisment

தோனி பற்றிய உங்கள் திட்டம் என்ன? - நேர்காணலில் சுனில் ஜோஷி அளித்த பதில் இதுதான்

நாங்கள் சில கடினமான கேள்விகளையும் கேட்டோம், ஆனால் அவரின் பதில்கள் மிகவும் தெளிவாக இருந்தன, நேரடியான பதில்களைக் கொடுத்தனர். அவர்களின் தகவல்தொடர்பு திறன்களைப் பற்றி நாங்கள் கேட்டோம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dhoni bcci news selectors questions

Dhoni bcci news selectors questions

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், தேர்வு குழு உறுப்பினர் ககன் கோடா ஆகியோரின் பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இவர்களுக்கு பதிலாக புதிய தேர்வாளர்களை தேர்வு செய்ய மதன்லால், ஆர்.பி. சிங், சுலக்‌ஷனா நாயக் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட்டது.

Advertisment

இந்த கமிட்டியினர் தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி, தமிழகத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன், ராஜேஷ் சவுகான், ஹர்விந்தர் சிங் ஆகிய ஐந்து பேரை இறுதி செய்தனர்.

விளையாட்டு வேறு; பெர்சனல் வேறு - ரசிகரை அலறவிட்ட கால்பந்து வீரர் (வீடியோ)

இந்த நிலையில் அவர்களிடம் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நேற்று நேர்காணல் நடத்தியது. இதன் முடிவில் இந்திய முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளரான சுனில் ஜோஷி, தேர்வு குழுவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை பரிந்துரை செய்து, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஆலோசனை கமிட்டி அனுப்பி வைத்தது. இதற்கு கிரிக்கெட் வாரியமும் ஒப்புதல் அளித்துள்ளது. தேர்வு குழு உறுப்பினராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹர்விந்தர்சிங் தேர்வானார்.

ஏற்கனவே ஜடாயின் பரன்ஜிப் (மேற்கு மண்டலம்), தேவாங் காந்தி (கிழக்கு), சரன்தீப் சிங் (வடக்கு) ஆகியோர் தேர்வாளர்களாக உள்ளனர். இவர்களுடன் இணைந்து ஜோஷி, ஹர்விந்தர்சிங் பணியாற்றுவார்கள்.

49 வயதாகும் சுனில் ஜோஷி இந்திய அணிக்காக 15 டெஸ்ட் மற்றும் 69 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 41 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 69 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 6 ரன்கள் விட்டு கொடுத்து ஐந்து விக்கெட் வீழ்த்தியது இவரின் சிறப்பான பந்து வீச்சாகும்.

இந்நிலையில், நேர்காணலின் போது அவர்களிடம் என்னவிதமான கேள்விகள் கேட்கப்பட்டன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் அடங்கிய அணி நிர்வாகத்தை அவர்கள் எவ்வாறு கையாள்வார்கள், எம்.எஸ். தோனியின் எதிர்காலம் குறித்த அவர்களின் பார்வை என்ன ஆகிய இரண்டு பிரதான கேள்விகள் அவர்கள் முன் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு, தோனியுடன் தகவல்தொடர்பு வழிகளைத் திறந்து வைத்திருப்பதாகவும், ஐபிஎல் செயல்திறன் அவரது எதிர்காலத்தை தீர்மானிக்க அனுமதிக்கும் என்றும் கூறியிருக்கின்றனர்.

பெண்கள் டி20 உலககோப்பை - இந்திய அணி பைனலுக்கு முன்னேற்றம்

இந்த பதில்களுக்கு பிறகே அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிசிசிஐ சார்பில் கூறுகையில், "ஓய்வு என்பது தனிப்பட்ட முடிவு. ஒரு வீரர் செயலில் இருக்கும் வரை, அவர் தேர்வுக்கு கருதப்படலாம். பெரிய வீரர்களிடம் வரும்போது, தகவல்தொடர்பு ஆப்ஷன்களை திறந்து வைக்குமாறு தேர்வாளர்களுக்கு (சிஏசி) அறிவுறுத்தப்பட்டது; தேர்வுக் குழுவின் செயல்முறையை விளக்க, தலைமை தேர்வாளர் நேரடியாக வீரருடன் தொடர்பு கொள்ள வேண்டும்" என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்தது.

தேர்வு நடந்தது குறித்து லால் கூறுகையில், "நாங்கள் சில கடினமான கேள்விகளையும் கேட்டோம், ஆனால் அவரின் பதில்கள் மிகவும் தெளிவாக இருந்தன, நேரடியான பதில்களைக் கொடுத்தனர். அவர்களின் தகவல்தொடர்பு திறன்களைப் பற்றி நாங்கள் கேட்டோம், அவர்கள் குழு நிர்வாகத்தை எவ்வாறு கையாள்வார்கள் என்றும் கேட்டோம். எல்லாவற்றையும் மனதில் வைத்து, அவர்களின் (ஜோஷி மற்றும் ஹர்விந்தர்) நேர்காணலை சிறப்பாக கையாண்டனர்" என்றார். மேலும், தேர்வுக் குழு வலுவான கேப்டனை சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நாங்கள் அவர்களை தேர்வு செய்தோம் என்றார்.

ஒரு வீரர் காயத்திலிருந்து திரும்பி வரும்போது, சர்வதேச போட்டிகளுக்கு பரிசீலிக்கப்படுவதற்கு முன்பு குறைந்தது ஒரு உள்நாட்டு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்று சிஏசி, புதிய தேர்வாளர்களுடன் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Mahendra Singh Dhoni Bcci
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment