dhoni bravo table tennis csk video - தோனியில் பேட்டிங்கில் மிரண்ட பிராவோ - லேட்டஸ்ட் வீடியோ
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்தியா தோற்று வெளியேறிய பிறகு, சர்வதேச கிரிகெட்டுக்கு திரும்பாமல் இருக்கிறார் தோனி. அதன்பின் நடைபெற்ற எந்தத் தொடரிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
Advertisment
நவம்பர் மாதம் தொடங்கவுள்ள வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரிலும் அவரது பெயர் இடம் பெறவில்லை.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத்திடம் தோனி குறித்து நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரசாத், “உலகக் கோப்பைக்குப் பிறகு எங்கள் சிந்தனை தெளிவாக இருக்கிறது. நாங்கள் ரிஷப் பந்த் மீது தான் கவனம் செலுத்துகிறோம். உலகக்கோப்பைக்குப் பிறகு நாங்கள் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து சென்று கொண்டிருக்கிறோம் என்பதை நான் தெளிவுப்படுத்தி விட்டேன்" என்றார்.
இதனால், இனிமேல் அவர் இந்தியாவுக்காக விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
Advertisment
Advertisements
இந்நிலையில், தோனி - பிராவோ டேபிள் டென்னிஸ் விளையாடும் வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ளது.
அதில், என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள். நான் எப்போதும் போல இருப்பேன் என்பதைப் போல, கேஷுவலாக பிராவோவுடன் அட்டகாசமாக டேபிள் டென்னிஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்.
அதிலும், தோனி அடித்த ஒரு ஷார்ட்டுக்கு பிராவோ ஜெர்க் ஆனது தான் ஹைலைட்.