கிரிக்கெட்டை பொறுத்தவரை மிகப் பெரிய சூப்பர்ஸ்டார் மகேந்திர சிங் தோனி தான் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான டிவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.. இந்நிலையில் வீட்டில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் ஒருவருக்கொருவர் வீடியோ கான்பரன்சில் பேசிக்கொண்டும், டுவிட்டரில் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டும் வருகின்றனர். அப்படி ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான போமி பாங்வாவுடன் வீடியோ சேட்டில் ஈடுபட்ட டி வைன் பிராவோ, நம்ம தல தோனிய புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணியின் வீரரான டிவைன் பிராவோ கடந்த 2011 இல் இருந்து இந்திய ஐபிஎல் விளையாட்டு போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் சிஎஸ்கே அணி வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2011 இல் இருந்து சிஎஸ்கே விற்காக 104 போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் 121 விக்கெட்டுகளை குவித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாது, 2013-2015 ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரரும் இவர்தான்.
கிரிக்கெட்டை பொறுத்தவரை மிகப் பெரிய சூப்பர்ஸ்டார் தோனிதான். எங்கள் அணியிலும் அப்படித்தான். அவருடன் மிகச் சுலபமாக உங்களால் பேச முடியும். கிரிக்கெட் களத்துக்கு வெளியே வீடியோ கேம் விளையாடிக் கொண்டு மிக கேசுவலாக இருப்பார் தோனி. அவர் அறையின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும். நீங்கள் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ஆனால் தோனிதான் அவர்களில் எல்லோர்களிலும் மிக தன்னடக்கம் உடையவர். சிஎஸ்கே ஒரு ஸ்பெஷல் அணி. எங்களுக்குத்தான் மிக நம்பிக்கையான ரசிகர்கள் உள்ளனர்” என்றும் பிராவோ பெருமைப்பட கூறியள்ளார்.
மேலும், ”சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பெரும் பங்கு தோனி மற்றும் ஃபிளமிங்கையே சாரும். அந்த வகையில் அணியின் வீரர்கள் ஃபிளெமிங்கையும் தோனியையும் முழுமையாக நம்புகிறார்கள். மற்ற வீரர்களும் தோனி மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்கள்” என டிவைன் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.