MS Dhoni, Hardik Pandya – UK-based businessman Kuljinder Bahia’s birthday party Tamil News: இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் குல்ஜிந்தர் பாஹியா. தி சண்டே டைம்ஸ் பணக்காரர் பட்டியலின்படி, 2,55,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்தியர்களிடையே பிரபலமான பயண நிறுவனமான சவுத்ஹால் ட்ராவல்ஸ் (Southall Travel) ஐ பஹியா வைத்திருக்கிறார்.
2012 ஆம் ஆண்டில், அவரது சொத்து மதிப்பு 43 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து 227 மில்லியன் பவுண்டுகள் ஆனது. பஹியா தனது இந்திய சொந்தங்களை தனது இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருப்பதாக அறியப்படுகிறார். அவர் இன்னமும் தனது இந்தியப் பள்ளியான பிஷப்ஸ் காட்டனின் வருடாந்தர லண்டன் ரீயூனியனுக்குச் செல்கிறார். சமீபத்தில் பள்ளியின் ரீயூனியன் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், தொழிலதிபர் குல்ஜிந்தர் பாஹியாவின் பிறந்தநாள் விழா துபாயில் நடைபெற்றது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி, இந்திய வீரர்கள் ஹார்திக் பாண்டியா, அவரது சகோதரர் குருனால் பாண்டியா, இஷான் கிஷன் மற்றும் ராப்பர் பாட்ஷா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராப்பர் பாட்ஷாவின் இசைக் கச்சேரி அரங்கேறி நிலையில், அவர் பாடும் பாடலை ரசித்து, தோனியும், ஹர்திக் பாண்டியாவும் கோரஸ் வரிகளை சத்தமாகப் பாடினர். மேலும், அவர்கள் அனைவரும் குழுவாக சேர்ந்து நடனமும் ஆடினர். இந்த வீடியோவை ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ கேப்ஷனில் ஹர்திக் பாண்டியா, “எங்கள் ஜம், எங்கள் நகர்வுகள், என்ன ஒரு இரவு” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil