தல தோனி எப்போதும் வைரல் தான்.. முன்னர் எப்போதும் கிரிக்கெட்டால் வைரல் ஆனவர், இப்போது மகள் ஸிவாவால் வைரல் ஆகிறார். இன்னும் சொல்லப்போனால், தோனியை இப்போது லைம் லைட்டில் வைத்திருப்பதே ஸிவா தான். அந்தளவிற்கு ஸிவாவின் சேட்டை வீடியோக்கள் வைரல் ஆகும். அதனால், தோனியும் பலவித ஹேஷ்டேக்குகளில் டிரென்ட் ஆவார்.
இந்நிலையில், சென்னை மெரீனா கடற்கரையில் தோனி தனது மகள் ஸிவாவுடன் பொழுதை கழித்த க்யூட் வீடியோ வெளியாகியுள்ளது. ஸிவாவை நிற்கவைத்து, அவளது கால்களில் கடல் அலைகள் முத்தமிடுவதை தந்தை தோனி ரசித்தார்.
உலகில் எங்கு சென்றாலும் தோனியை கொண்டாடும் நம்மூர் ரசிகர்கள், தமிழ்நாட்டில் அவர் இருந்தால் சும்மா விடுவார்களா.. அதிகளவில் இந்த வீடியோ தற்போது ஷேர் செய்யப்பட்டு வருகிறது.