/tamil-ie/media/media_files/uploads/2023/05/tamil-indian-express-2023-05-11T125023.617-1.jpg)
CSK Captain MS Dhoni
16-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்று (மே 20) சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அபாரமாக விளையாடி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்களை குவித்தது. 224 என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் வார்னர் பொறுப்புடன் விளையாட டெல்லி ஸ்கோர் சற்று மேல் ஏறியது.
களத்தில் தனி ஒருவராக போராடிய கேப்டன் வார்னர் 86 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆஃப்-க்கு 2வது அணியாக தகுதி பெற்றது.
ஜடேஜா செய்தது என்ன?
இந்நிலையில், போட்டி முடிவில் சி.எஸ்.கே கேப்டன் தோனி மற்றும் ஜடேஜா இருவரும் பேசிக் கொள்ளும் வீடியோ மூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாக்குவாதத்தில் ஈடுபட்டது போல் அந்த வீடியோவில் தெரிகிறது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 4 ஓவர் வீசிய நிலையில் 1 விக்கெட் மட்டும் எடுத்து அதிகபட்சமாக 50 ரன்களை கொடுத்தார். இது தொடர்பாக இருவரும் பேசியிருக்கலாம் என தெரிகிறது.
— A (@cricketvf) May 20, 2023
இருப்பினும் இந்த சீசனில் ஜடேஜா பந்துசீச்சில் கலக்கி உள்ளார். இதுவரை நடைபெற்ற 14 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை எடுத்து 7.65 என்ற எகானமி கொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.