/tamil-ie/media/media_files/uploads/2020/05/untitled-2020-05-28T113545.076.jpg)
MS Dhoni, Mahendrasingh Dhoni, Dhoni Retires rumour trending, Dhoni retires, தோனி ஓய்வு, தோனி, மகேந்திர சிங் தோனி, தோனி ஓய்வு ட்ரெண்டிங், தோனி ஓய்வு இல்லை, Dhoni fans retaliate, Dhoni never retires trending, Dhoni no retires, Dhoni twitter trending, latest trending news, cricket news, latest tamil trending news
கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் ஓய்வு தொடங்கிவிட்டதாக டுவிட்டரில் ட்ரெண்டிங் ஆகி பரபரப்பானதை அடுத்து, இந்த வதந்திக்கு தோனியின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேட்படன்களில் முதன்மையானவர் மகேந்திரசிங் தோனி. ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகவும், அணியை வழி நடத்திச் செல்வதில் சிறந்த கேப்டனாகவும் திகழ்ந்தவர். 38 வயதாகும் தோனி கடந்த உலகக் கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணி அரை இறுதி போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது.
உலகக் கோப்பை போட்டி தோல்விக்குப் பிறகு, தோனி இந்திய அணியில் இடம் பெறவில்லை. இதனால், தோனியின் ஓய்வு குறித்தான பேச்சு விவாதமாகி வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஐபிஎல் போட்டிக்காக சென்னை வந்த தோனி, கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டதால் ராஞ்சிக்கு புறப்பட்டு சென்றார். சர்வதேச போட்டிகளைத் தவிர தோனிக்கு களமாக அமைந்த ஐபிஎல் போட்டிகளும் இல்லை இல்லாததால் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியானது.
அதே நேரத்தில் பொது முடக்கம் எப்போது முடியும், கிரிக்கெட் போட்டிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்த எந்த நிச்சயமும் இல்லாததால், தோனியின் ஓய்வு பெறும் காலம் வந்துவிட்டது என்றே கிரிக்கெட் விமர்சகர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் விவாதித்து வருகின்றனர்.
ஒரு கிரிக்கெட் சாம்பியனான தோனி எப்போது ஒய்வு பெற வேண்டும் என்பதை அவரிடமே விட்டுவிட வேண்டும். தோனியின் ஓய்வு குறித்து நிர்பந்திக்கக் கூடாது என்று பல சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டுவிட்டரில், தோனியின் ஓய்வு தொடங்கி விட்டது என்று டுவிட்டரில் ட்ரெண்டிங் ஆனது. தோனி ஓய்வு என ட்ரெண்டிங் ஆனதால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பரபரப்படைந்தனர். தங்களுக்கு பிடித்தமான கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு பெறுகிறாரா? என்று ரசிகர்கள் பலரும் தெரிந்துகொள்ள முயன்றபோது, தோனி ஓய்வு குறித்து, பிசிசிஐ தரப்பிலோ, தோனி தரப்பிலோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், தோனி ஓய்வு என்பது வதந்தி என்பது உறுதியானது.
தோனியின் ஓய்வு பற்றிய வதந்தி டுவிட்டரில் ட்ரெண்ட் ஆனதைத் தொடர்ந்து கோபமடைந்த அவரது ரசிகர்கள், டுவிட்டரில், தோனிக்கு ஓய்வு இல்லை என்ற அர்த்தத்தில், #DhoniNeverTires என்று டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஆனால், தனது ஓய்வு பற்றி சமூக ஊடகங்களில் உலா வரும் வதந்திகள், விவாதங்கள் என எதைப் பற்றியும் கவலைப் படாமல், தோனி ராஞ்சியில் தனது வீட்டில் தனது செல்ல மகள் ஜிவா உடன் விளையாடிக்கொண்டும் உடற்பயிற்சி செய்துகொண்டும் இருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.