வெலிங்கடன் ஒருநாள் போட்டியில், கடைசிக் கட்டத்தில் இந்திய அணியை வெற்றிப் பெற வைத்தது முழுக்க முழுக்க தோனியின் சமயோஜித செயல்பாடு தான் என்றால் அது மிகையாகாது.
31 ஓவர்களில் 135/6 என்று நியூஸிலாந்து திணறிய நிலையில் சாண்ட்னர், நீஷம் பார்ட்னர்ஷிப் இணைந்து ஸ்கோரை 176 ரன்களுக்கு 6 ஓவர்களில் கொண்டுச் சென்றனர். நீஷம் அடித்த ஷாட்கள் ஒவ்வொன்றும் நேர்த்திய அடி. டிப் ஆகி, எட்ஜ் ஆகி பந்து செல்லவில்லை. பேட்டில் சரியான இடத்தில் பந்தை டச் செய்து விளாசிக் கொண்டிருந்தார்.
ஷமி, புவனேஸ்வர், பாண்ட்யா என அனைவரது ஓவரிலும் பவுண்டரிகள் பறந்தன. பாண்ட்யா ஓவரில் பேக் டூ பேக் சிக்ஸர்கள் என ஆட்டம் நியூசி கையில் சென்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில், இன்னிங்சின் 37வது ஓவரின் 2வது பந்தை கேதர் ஜாதவ் வீச நீஷம் நன்றாகக் காலை நீட்டி ஸ்வீப் ஆட முயன்றார். பந்து சிக்கவில்லை, பேடில் பட்டு பந்து பின்னால் தோனியிடம் சென்றது.
இதனையடுத்து ஜாதவ் எல்.பி.முறையீடு எழுப்பினர். ஆனால் அது ஸ்டம்ப் லைனுக்கு வெளியே காலில் வாங்கிய பந்து என்பதால் எல்.பி.கிடையாது. பந்து பின்னால் தோனியிடம் சென்றதை அறியாத ஜேம்ஸ் நீஷம் கிரீசுக்கு வெளியே இருந்தார்.
இதை கவனித்த தோனி, மிகச்சாமர்த்தியமாக பந்தை அண்டர் ஆர்ம் த்ரோ செய்து ஸ்டம்ப்பை பதம் பார்க்க, 44 ரன்களில் நீஷம் ரன் அவுட் ஆனார். அவரை ரன் அவுட் செய்துவிட்டு குழந்தைப் போல தோனி துள்ளிக் குதித்தார். பொதுவாக, விக்கெட் விழுந்தால், கேஷுவலாக டீல் செய்யும் தோனி, இந்த குறிப்பிட்ட விக்கெட்டை மிகவும் கொண்டாடினார்.
ஏனெனில், அவருக்கு தெரியும், அந்த தருணத்தில் இந்தியா ஆட்டத்தை வென்றுவிட்டது என்று!.
மேலும் படிக்க - ராஸ் டெய்லர் செய்த மிகப்பெரிய தவறு! 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!