துபாயில் வளைப் பயிற்சியில் ஈடுபட்ட தோனி, ஜடேஜா பந்துவீச்சிலும் ஷேன் வாட்சன் கரன் சர்மா பந்துவீச்சிலும் சிக்ஸ் அடித்து பட்டையைக் கிளப்பிய வீடியோ வெளியாகி உள்ளது.
ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், துபாயில் பசென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. பயிற்சியின்போது தோனியும் வாட்சனும் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடைபெற உள்ளது. ஐபிஎல் முதல் போட்டி செப்டம்பர் 19ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற உள்ளது.
அதனால், இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள் போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட துபாய் சென்றுள்ளனர். சிஎஸ்கே அணி துபாய் சென்றதும் அங்கே நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில், அணியில் ஒரு பந்து வீச்சாளர் உள்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், சிஎஸ்கே அணியினர் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். சிஎஸ்கே அணியின் கேப்டன் தல தோனியும் அந்த அணியில் உள்ள வாட்சனும் வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின்போது, தோனி, ரவீந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லா, ஷர்துல் தாக்கூர் பந்து வீச்சை எதிர்கொண்டு அவர்களின் பந்துகளை அதிரடியாக விளையாடினார். ஜடேஜா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு பட்டையக் கிளப்பினார். அதே போல, வாட்சன் கரன் சர்மா பந்தை அதிரடியாக விளையாடுகிறார்.
இந்த வளைப் பயிற்சி வீடியோவை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் தல தோனியும் வாட்சனும் நல்ல ஃபார்மில் உள்ளதை அறிந்து சிஎஸ்கே கோப்பையை வெல்ல வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"