/tamil-ie/media/media_files/uploads/2019/03/a870.jpg)
dhoni smashes sixes ipl 2019 csk warm up - குட் டச்... நீட் டச்... ஸ்மாஷ்! மஞ்சள் ஜெர்ஸியில் பந்துகளை பறக்கவிட்ட தோனி! (வீடியோ)
ஐபிஎல் தொடரின் 12வது சீசன் வரும் மார்ச்.23ம் தேதி தொடங்குகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஐபிஎல் கொண்டாட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்க, தனது ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் தோனியின் பேட்டிங் வீடியோ வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. தோனி vs கோலி என்ற போட்டியை காண்பது ரசிகர்களுக்கு மிரட்டலான ட்ரீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் படிக்க - IPL 2019: இது சென்னை சூப்பர் கிங்ஸ்! சேட்டையைத் துவக்கிய தோனி & கோ!
இந்நிலையில், சென்னை சேப்பாக் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே அணி பயிற்சியைத் தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக கேப்டன் தோனி, நேற்று இரவு வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவரது ஷாட்டில் தெளிவான டச் இருந்தது. அந்த டச் பந்துகளை பெவிலியனுக்கு கொண்டுச் சென்றன. 2.20 நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த வீடியோவில், தோனி குறைந்தது மூன்று சிக்ஸர்களையாவது பறக்கவிட்டிருப்பார்.
140 seconds of Classic #Thala Dhoni! #WhistlePodu#Yellove ???????? pic.twitter.com/079ZXqdUaS
— Chennai Super Kings (@ChennaiIPL) 16 March 2019
தல-க்கு ஐபிஎல் வந்துட்டாலே கையில் ஒரு எக்ஸ்டிரா பவர் வந்துடுது!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.