/indian-express-tamil/media/media_files/j90GF56BL9wUlX5FY3Dk.jpeg)
சி.எஸ்.கே அணியை எதிர்காலத்தில் வழிநடத்த ருதுராஜ் தகுதியுடையவர் என நம்புகிறேன். இருப்பினும் மகேந்திர சிங் தோனி நல்ல முடிவெடுப்பார்; கோவையில் அம்பத்தி ராயுடு பேட்டி
கோவை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியின் பயிற்சி விளையாட்டு மையத்தின் தொடக்க விழா நடைபெற்றது.இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் அம்பத்தி ராயுடு பங்கேற்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது; என்னுடைய இடத்தை பூர்த்தி செய்வதற்கு சென்னை அணியில் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். ஏலத்திலும் சிறந்த வீரர்களை அணி நிர்வாகம் எடுக்கும்.
சி.எஸ்.கே அணியை எதிர்காலத்தில் வழிநடத்த ருதுராஜ் தகுதியுடையவர் என நம்புகிறேன். இருப்பினும் மகேந்திர சிங் தோனி நல்ல முடிவெடுப்பார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணி மற்றும் தற்போது விளையாடி வரும் அணிகள் இணைந்து ஒரு அணியாக உருவெடுக்கும் போது வருங்காலத்தில் ஐ.சி.சி கோப்பைகளை வெல்ல முடியும் என நம்புகிறேன்.
உலகக்கோப்பை தொடரில் ஒன்றரை மாதங்கள் சிறப்பாக விளையாடினோம்.விளையாட்டில் ஒரு மோசமான நாள் என்பது அமைவது இயல்பு.நம் அணி வீரர்களை குறை சொல்ல ஒன்றும் இல்லை.அன்றைய தினம் ஆடுகளம் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை.இருப்பினும் எந்தவிதமான ஆடுகளத்திலும் நம்மால் சிறந்து விளங்க முடியும். உலக கோப்பை இறுதி அன்று ஆடுகளம் (Slow Wicket) ஆக மாறியது.அதனை ஒரு காரணமாக கூறி விட்டு தப்ப முடியாது.கிரிக்கெட்டில் இது போன்று நடப்பது இயல்புதான்.
பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியில் இல்லை. நான் ஓய்வு பெற்று விட்டேன்.அந்த இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது அதை அணி நிர்வாகம் கருத்தில் கொண்டு பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அம்பத்தி ராயுடு தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.