Advertisment

'சென்னை அணியை விட்டுச் செல்லவில்லை' - தோனியின் பதிலால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

நாங்கள் எங்கு விளையாடினாலும் ரசிகர்களின் ஆதரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைக்கிறது. அது, சேப்பாக்கத்தில் விளையாடுவது போன்ற உணர்வை அளிக்கிறது. ரசிகர்களுக்கு நன்றி.

author-image
WebDesk
New Update
எனது கடைசி டி20 போட்டி சென்னையில் தான்; ’தல’ தோனி உறுதி

துபாயில் நடந்த ஐபிஎல் 2021 தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. சிஎஸ்கே அணிக்கு கோப்பையுடன் பரிசுத்தொகையாக ரூபாய் 20 கோடி வழங்கப்பட்டது கடந்தாண்டு ப்ளே ஆஃப் சுற்றுக்குகூட தகுதி பெறாமல் வெளியேறிய சிஎஸ்கே அணி, இந்த முறை வலுவான அணியாக களமிறங்கி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Advertisment

சிஎஸ்கே அணி சாம்பியின் பட்டத்தை வென்றதால், தோனியில் இறுதி ஆட்டம் இதுவாக தான் இருக்கும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி கொண்டிருந்த சமயத்தில், அதற்கான விடையை தோனி கூலாக தெரிவித்தார்.

“சென்னை அணியில் நீங்கள் விட்டுச் சென்ற மரபு குறித்து பெருமைப்படுகிறீர்களா?” என்று ஹர்ஷா போகல் கேள்வி எழுப்பிய போது, “நான் இன்னும் சென்னை அணியை விட்டுச் செல்லவில்லை என்று சிரித்துக் கொண்டே கேப்டன் தோனி பதிலளித்தார் .

அவ்வளவு தான், சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர். இருப்பினும், சிஎஸ்கேயில் தொடர்வது தன் கையில் இல்லை என்பதையும் தோனி கூறியதால், அவரை மஞ்சல் உடையில் பார்ப்போமா இல்லையா என்ற கேள்வி விடையில்லாமல் உள்ளது.

வெற்றிக்கு பின் பேசிய அவர், "சென்னை அணியும் நிலைத்தன்மை வாய்ந்த அணி. ஆனால் சென்னை அணியும் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. வெறும் எதிரணியினராக மட்டும் இருந்துவிடாமல் உணர்வுப்பூர்வமான சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். 

சிஎஸ்கே அதை அறிந்த அணியாக எதிர்காலத்தில் விளங்கும். நல்ல அணியினர் இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை. தனித்தன்மை ஆட்டத்தைக் கொண்ட வீரர்களை சென்னை அணி கொண்டிருந்தது. 

நான் ஏற்கெனவே உங்களிடம் தெரிவித்துவிட்டேன். அடுத்த ஆண்டு சீசனுக்கு இரு அணிகள் புதிதாக வருகின்றன. ஆதலால், சிஎஸ்கே அணிக்கு எது சிறந்ததாக இருக்கிறதோ அந்த முடிவை எடுப்போம். எந்தக் காரணத்தினாலும் நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது.
தக்கவைக்கப்படும் 4 வீரர்களில் நான் இருப்பேனா என்பது தெரியாது. வலிமையான வீரர்களைக் கொண்ட அணி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அணி நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணிக்கு சிறப்பாகப் பங்களிப்பு செய்யக்கூடிய வலிமையான அணியை உருவாக்க வேண்டும். நாங்கள் எங்கு விளையாடினாலும் ரசிகர்களின் ஆதரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய போதும்,ரசிகர்கள் ஆதரவு கிடைத்து. அது, சேப்பாக்கத்தில் விளையாடுவது போன்ற உணர்வை அளிக்கிறது. ரசிகர்களுக்கு நன்றி.

சிஎஸ்கே அணியைப் பற்றி பேசும்முன், கொல்கத்தா அணியைப் பற்றி பேசுவது அவசியம். எந்த அணியாவது ஐபிஎல் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தால், அதற்கு கடின முயற்சி தேவை என்பதற்கு உதாரணமாக இருப்பது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான். முதல் சுற்று ஐபிஎல் இடைவெளி அவர்களுக்கு நன்கு உதவியிருக்கிறது" என்றார்.


தொடர்ந்து பேசிய கேகேஆர் அணி கேப்டன் மார்கன், " துரதிருஷ்டவசமாக இன்றைய நாள், எங்களுடையது அல்ல. வெங்கடேஷ் இந்த தளத்திற்கு புதியவர், ஆனால் அவருக்கு பெரிய எதிர்காலம் உள்ளது. அவரும், கில்லும் எங்கள் பேட்டிங்கிற்கு முக்கியமானவர்கள். சீசன் முழுவதும் திரிபதியின் ஆட்டம் சிறப்பான இருந்தது. எங்கள் அணியின் ஆட்டத்தை பார்த்து, பெருமை்படுகிறேன் என்றார்.   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Csk Ms Dhoni Ipl 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment