நாட்டுப்பற்றை வேற லெவலில் உணர்த்திய தோனி! வைரலாகும் கீப்பிங் கிளவுஸ்

இந்தியாவின் பாராமிலிட்டரி சிறப்பு படையின் 'பாலிதான்' என்ற முத்திரையை பதித்து உபயோகித்துள்ளார்

உலகக் கோப்பை 2019 தொடரில், நேற்று(ஜூன்.5) சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 47.3வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்து வென்றது. ரோஹித் 122 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம், தென்னாப்பிரிக்கா தான் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் தோற்க, இந்திய அணி தான் விளையாடிய முதல் போட்டியை வெற்றியுடன் துவக்கியது.

மேலும் படிக்க – India vs South Africa, World Cup 2019: வெற்றியுடன் துவக்கிய விராட் கோலி படை : இந்தியா- தென் ஆப்ரிக்கா போட்டி ஹைலைட்ஸ்

இந்நிலையில், நேற்றைய போட்டியில் தோனியின் செயல்பாடு ரசிகர்களிடையே பெரும் வைரலாகி உள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி, தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக, தனது கீப்பிங் கிளவுஸில் இந்தியாவின் பாராமிலிட்டரி சிறப்பு படையின் ‘பாலிதான்’ என்ற முத்திரையை பதித்து உபயோகித்துள்ளார்.

இந்த முத்திரையின் அர்த்தம் ‘தியாகம்’ என்பதாகும். கடந்த 2011ம் ஆண்டு தோனிக்கு ராணுவத்தில் கவுரவ லெப்டிணன்ட் பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து, 2015ம் ஆண்டு தோனி பாராமிலிட்டரி பிரிவில் பயிற்சியும் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில், தோனியின் இந்த செயல்பாட்டிற்கு வழக்கம் போல் சமூக தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

ரசிகர்களும் பலரும் தோனியின் முத்திரை பதித்த அந்த கீப்பிங் கிளவுஸை ஷேர் செய்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close