Advertisment

'அம்மா நகையை விற்றோம்; பேட் வாங்க கடன் வாங்கினோம்': இந்திய இளம் வீரர் உருக்கம்

22 வயதான துருவ் ஜூரல் , கடந்த ஆண்டு டிசம்பரில் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடிய இந்திய ஏ அணியில் இடம் பெற்று இருந்தார். 

author-image
WebDesk
New Update
Dhruv Jurel on his Cricket journey to Indian Test Team Tamil News

இந்திய அணியில் 3வது விக்கெட் கீப்பராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் வீரரான துருவ் ஜூரல் இடம் பெற்றுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

India vs England: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 25ம் தேதி முதல் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

Advertisment

இந்நிலையில், இந்த தொடரில் முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக விலகியுள்ளார். அதே நேரத்தில். இந்தியாவின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது ஓய்வு கேட்ட இஷான் கிஷான் தேர்வு செய்யப்படவில்லை.

இந்திய அணியில் கே.எல் ராகுல், பரத் உடன் 3வது விக்கெட் கீப்பராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் வீரரான துருவ் ஜூரல் இடம் பெற்றுள்ளார். 22 வயதான துருவ் ஜூரல் , கடந்த ஆண்டு டிசம்பரில் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடிய இந்திய ஏ அணியில் இடம் பெற்று இருந்தார். 

பெனோனியில் நடந்த இரண்டாவது போட்டியில் அவர் 69 ரன்களை எடுத்தார். மேலும் சமீபத்தில் ஆலப்புழாவில் நடந்த ரஞ்சி டிராபியின் முதல் சுற்று குழு ஆட்டத்தில் கேரளாவுக்கு எதிராக  உத்தரபிரதேச அணிக்காக 63 ரன்கள் எடுத்தார். கடந்த ஆண்டு விதர்பாவுக்கு எதிராக முதல்தர போட்டியில் அறிமுகமான ஜூரல், இதுவரை 15 போட்டிகளில் 46 சராசரியில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்களுடன் 790 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்திய அணிக்கு தேர்வானது குறித்தும், தனது கடந்த கால நிகழ்வுகளையும் துருவ் ஜூரல் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் டைனிக் ஜாக்ரன் செய்தி இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளது பின்வருமாறு:- 

நான் ராணுவப் பள்ளியில் படித்தேன். விடுமுறை நாட்களில் ஆக்ராவில் உள்ள ஏக்லவ்யா ஸ்டேடியத்தில் கிரிக்கெட் முகாமில் சேர வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான படிவத்தை நிரப்பினேன். ஆனால் இது குறித்து என் அப்பாவிடம் சொல்லவில்லை. அவருக்குத் இது தெரிந்ததும், அவர் என்னைத் திட்டினார்.

ஆனால், எனக்கு கிரிக்கெட் பேட் வாங்க ரூ.800 கடன் வாங்கினார். எனக்கு கிரிக்கெட் கிட் வேண்டும் என்று சொன்னபோது, அப்பா என்னிடம் அதற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டார். ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை செலவாகும் என்று சொன்னேன். இதை கேட்டதும் என் அப்பா விளையாடுவதை நிறுத்தச் சொன்னார்.

ஆனால் நான் பிடிவாதமாக இருந்தேன். குளியலறைக்குள் சென்று பூட்டிக்கொண்டேன். பின்னர் என் அம்மா தனது தங்கச் சங்கிலியை விற்று எனக்கு கிரிக்கெட் கிட் வாங்கித் தந்தார். தற்போது நான் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளேன் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். நான் இதை என் குடும்பத்திடம் சொன்னேன். அப்போது அவர்கள் என்னிடம் எந்த இந்திய அணிக்காகவா தேர்வாகி உள்ளாய்? என கேட்டார்கள்.

நான் அவர்களிடம் ரோகித், விராட் ஆடும் இந்திய அணியைச் சொன்னேன். இதைக் கேட்டதும் எனது ஒட்டுமொத்த குடும்பமும் உணர்ச்சிவசப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் , முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (விக்கெட் கீப்பர்), அவேஷ் கான். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment