நான்காவது நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளைக்கு முன்னதாக, சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் ஷுப்மான் கில் தனது விக்கெட்டை இழந்தார். ஸ்காட் போலண்ட் வீசிய பந்தை கில் இடது புறமாக தள்ளிய நிலையில், அங்கு நின்றிருந்த கேமரூன் கிரீன் ஒரு கையால் டைவ் செய்து கேட்ச் பிடித்தார். அடுத்து என்ன நடந்தது என்பதில் சர்ச்சை வருகிறது. அவர் உருண்டு செல்லும்போது, பந்து தரையைத் தொட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரிக்கி பாண்டிங் ஐ.சி.சி தொகுப்பில் கேட்ட கேள்வி இது. "பந்து அவரது கைக்குள் சென்றது தரையில் இருந்து 6-8 அங்குல உயரத்தில் இருக்கலாம், ஆனால் எனக்கு எழுந்துள்ள கேள்வி என்னவென்றால், கேட்சை முடித்த பிறகு பந்தின் எந்தப் பகுதியும் தரையைத் தொடுமா என்பதுதான். இதைத்தான் ரோஹித் சர்மா நடுவர்களுடன் வாதிட்டு இருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்; அதனால்தான் ஷுப்மான் கில் மிகவும் ஏமாற்றமடைந்தார் என்று நான் நம்புகிறேன்.” என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.
இதையும் படியுங்கள்: வீங்கிய விரலுடன் ஸ்கேன் செய்ய மறுத்து போராடிய ரகானே: மனைவி நெகிழ்ச்சி பதிவு
"அது தரையில் இருந்து ஆறு-எட்டு அங்குல உயரத்தில் கொண்டு சென்றது; அதைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அது உண்மையில் உருண்டு, மேற்பரப்பின் உச்சியைத் தொட்டதா?" என பாண்டிங் கேள்வி எழுப்பினார்.
அவரது சக வர்ணனையாளர் குமார் சங்கக்காரவுக்கும் இதே சந்தேகம் இருந்தது.
"ஆமாம், நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பற்றியது. அவர் பந்தின் கீழ் விரல்களால் பந்தை பிடித்தார், ஆனால் பந்தின் ஏதேனும் ஒரு பகுதி தரையில் தொட்டால், அது பந்து கையில் இருக்க உதவுவதாக கருதப்படும், இந்தநிலையில் வழக்கமாக நடுவர்கள் எப்பொழுதும் அவுட் கொடுக்கமாட்டார்கள்," என்று சங்கக்காரா கூறினார்.
ரவி சாஸ்திரியும் இதே கருத்தை வலியுறுத்தினார். "மூன்றாவது நடுவர் விரல்கள் கீழே இருப்பதாக நினைத்தார், ஆனால் அவர் கேட்சை முடித்த பிறகு அது உருண்டதா என்பது கேள்வி." என்று ரவி சாஸ்திரி கூறினார்.
‘முதல் நடுவர் உங்களுக்கு அவுட் கொடுத்தால், மூன்றாவது நடுவர் அதை முறியடிக்க உறுதியான ஆதாரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் சுனில் கவாஸ்கர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil